states

img

2024-இல் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து : நிதிஷ்குமார்

பாட்னா, செப்.16- 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்தும் வகையில், எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் பணியில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் இறங்கியுள்ளார். கடந்த வாரம் தில்லியில் முகாமிட்ட அவர்,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துவங்கி, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா, சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, தில்லி முதல்வர் அர விந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் எச்.டி.குமாரசாமி, இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) தலைவர் ஓம்  பிரகாஷ் சவுதாலா உள்ளிட்டோரைச் சந்தித்து உரையாடினார்.

இதனடிப்படையில், செப்ட ம்பர் 25-ஆம் தேதி, ஐஎன்எல்டி தலைவர்  தேவிலாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத் தன்று மாநிலக் கட்சிகளை ஓரணியில் நிறுத்தும் வகையில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கும் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிதிஷ்குமார் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று ஒன்றிய அரசில்  ஆட்சி அமைந்தால், பின்தங்கிய மாநிலங் களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும். பீகார் மாநிலத்தை மட்டும் மனதில் வைத்து இதனை நான் கூறவில்லை. பின்தங்கிய பிற மாநிலங்களையும் கருத்தில் கொண்டுதான் இதனை கூறுகிறேன். இப்போதைய ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையை எடுக்காமல் உள்ளது ஏன்? என்பது இதுவரை தெரிய வில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜக-வுடன் எங்கள் கட்சி மிக நீண்ட காலம் கூட்டணியில் இருந்தது தவறு. பாஜக தலைவா்கள் தொடர்ந்து பொறுப்பற்ற வகையில் பேசியும், செயல்பட்டும் வருகின்றனர். அக்கூட்டணியில் இருந்து நான்  வெளியேறியதை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா  பானர்ஜி ஆகியோர் வெகுவாகப் பாராட்டி னர். தில்லி பயணத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரைச் சந்தித்தது ஆக்கப்பூர்வ மாக அமைந்தது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு  கொண்டு பேசினேன்” என்றும் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

சிறப்பு அந்தஸ்தால் என்ன பயன்?

நிதிஷ்குமார் கூறுவது போல மாநிலங் களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், ஒன்றிய அரசின் திட்டங்களில் ஒன்றிய - மாநில அரசுகளின் நிதிப் பகிர்வு 90:10 சதவிகிதமாக இருக்கும். திட்டத்தின் மொத்த மதிப்பில் 90 சதவிகிதத்தை ஒன்றிய அரசு வழங்கும். மாநில அரசு எஞ்சிய 10 சதவிகிதத்தை கொடுத்தால் போதுமானது. இந்த வகையில், இந்தியாவில் அருணாச்சல பிரதேசம், அசாம், இமாச்சல பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், மணிப்பூர், மேகா லயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகண்ட் ஆகிய 11 மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்து பெற்ற  மாநிலங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

;