தொகுதி பங்கீடு தொடர்பாக “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் பீகார் மாநில கட்சி களான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜன தாதளம் (ஜேடியு) - லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆகிய கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், இதனால் “இந்தியா” கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி விலகுவதாகவும் வடமாநி லங்களை மையமாக கொண்ட ஊட கங்கள் சமீபத்தில் தலைப்பு செய்தியாக வெளியிட்டது.
இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் இந்த செய்திகள் வெறும் புரளி என மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”பீகார் மாநிலம் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலேயே வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்க உள் ளது. ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏதும் இல்லை” என லாலு பிரசாத் யாதவ் தெரி வித்துள்ளார். மேலும் ஜேடியு - ஆர்ஜேடி கட்சி களுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் மற் றொரு தகவலும் வெளியாகியுள்ளது.