states

img

பீகார் சரண் மக்களவைத் தொகுதியில் லாலு மகளுக்கு எதிராக பாஜக சதி

40 மக்களவை தொகுதியை கொண்ட பீகார் மாநிலத்தில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடை பெற்ற 5 கட்டத் தேர்தலில் 24 தொகுதி களுக்கு வாக்குப்பதிவு நிறைவுபெற் றுள்ளது. 5ஆம் கட்ட தேர்தலில் சரண், ஹாஜிபூர், சீதாமர்ஹி, மதுபானி, முசா பர்பூர் ஆகிய 5 தொகுதிகளுக்கு திங்க ளன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 5 தொகுதிகளில்  55.85 சதவீத வாக்கு கள் பதிவாகியது.

சரண் தொகுதியில் பிகாரி தாக்கூர் சௌக் அருகே உள்ள படா டெல்மா பகு தியில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்  குப்பதிவின் போது முறைகேடு சம்ப வங்கள் அரங்கேறியதாக பாஜக மீது ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தொண் டர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் இது தான் சமயம் என்று பாஜகவினர் வன் முறையை கட்டவிழ்த்துவிட, ஆர்ஜேடி தொண்டர்கள் பதிலடி கொடுக்க, படா  டெல்மாவில் வன்முறை வெடித்தது.  இந்த மோதலில் நடந்த துப்பாக்கிச் சூட்  டில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயம டைந்த 3 பேர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறை சம்பவத்தால் படா  டெல்மாவில் 144 தடை அளவிற்கு போலீஸ் பாதுகாப்பும், இரண்டு நாட்க ளுக்கு சரண் நகர் முழுவதும் இணைய தள சேவைக்கான தடையும் விதிக்கப் பட்டுள்ளது.

லாலு மகளுக்கு எதிராக சதி
சரண் மக்களவை தொகுதியில் “இந்தியா” கூட்டணி வேட்பாளராக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு  பிரசாத்தின் மக்கள் ரோகினி ஆச்  சார்யா களமிறங்கியுள்ளார். ரோகினி  ஆச்சார்யா மோடியின் சர்வாதிகா ரத்திற்கு எதிராக மிக தைரியமாக பேசக்  கூடியவர். இவர் 18ஆவது மக்கள வைத் தேர்தலில் வெற்றி பெறாவிட் டால், நாடாளுமன்றத்தில் பாஜக வுக்கு சவாலாக இருப்பார் என்பதை  கருத்தில் கொண்டு, ரோகினி ஆச்  சார்யா தொகுதியில் பாஜக முறைகேடு  சம்பவங்களை அரங்கேற்ற முயற் சித்தது. ஆனால் சுதாரித்துக் கொண்ட  ஆர்ஜேடி தொண்டர்கள் அதை தகர்த்த னர். இதன் காரணமாகவே பாஜக வன்  முறையை கட்டவிழ்த்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

லடாக்கிலும் வன்முறையை தூண்டிவிட்ட பாஜக

இமயமலைச் சாரலில் உள்ள யூனியன் பிரதேச மான லடாக்கில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதிக்கு திங்களன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. லடாக்கில் மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 70 சதவீத வாக்குகள் பதிவாகியது. தோல்வி பயத்  தால் லடாக்கிலும் தேர்தல்  வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது பாஜக. லே பகுதி யில் உள்ள ஹவுசிங் காலனி  வாக்குச்சாவடியில் தேர்தல்  விதிகளை மீறி பாஜகவினர் சுவ ரில் சர்ச்சைக்குரிய வகையி லான வாசகங்களை எழுதியது தொடர்பாக காங்கிரஸ் உள்  ளிட்ட “இந்தியா” கூட்டணி கட்சியினர் கேள்வி எழுப்பி னர். அடுத்த சில நிமிடங்களில் லடாக்கின் காங்கிரஸ் வேட்பா ளர் செரிங் நம்கியாலுக்கும், பாஜக வேட்பாளர் தாஷி கியால்  சனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட, சம்பவ  இடத்தில் இருந்த பாஜக -  “இந்தியா” கூட்டணி கட்சி யினர் என இருதரப்பினருக் கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வன்முறையை தடுக்க போலீ சார் தடியடி நடத்தி கூட்டத்தை  கலைத்தனர். தோல்வி பயத்  தில் உள்ள பாஜக திரிபுரா,  மேற்குவங்கம், உத்தரப்பிர தேசம் ஆகிய மாநிலங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. அதைப் போல, மிகச்  சிறிய மக்களவை தொகுதி யான லடாக்கிலும் பாஜக  வன்முறையை கிளப்பிவிட் டுள்ளதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வரு கின்றன.

;