states

img

கோவில் விழாவில் கூட்ட நெரிசல் பீகாரில் 7 பேர் பலி

பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தின் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ளது பாபா சித்தேஷ்வர்நாத் கோவில். ஞாயிறன்று நள்ளிரவு 11:30 மணி யளவில் கோவிலின் நடுப்பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்  சிக்கி 6 பெண்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். காயமடைந்த 13க்கும் மேற் பட்டோர் ஜெகனாபாத் மாவட்ட மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். மாவட்ட நிர்வாகம் போதுமான பாது காப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளாததே இந்த கூட்ட நெரிசலுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

அசாமிலும் 5 பேர் பலி...

அசாம் மாநிலத்தின் கோக்ரஜார் மாவட்டத்தில் திங்களன்று காலை மகாமாயா கோவிலுக்கு அருகே சென்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் கோக்ரஜார் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.