states

img

பீகார் துப்பாகிச் சூடு - காவல்துறை அதிகாரிகள் 7 பேர் இடைநீக்கம்

பீகார் மாநிலத்தில் மர்ம நபர்கள் பொதுமக்கள் மீது துப்பாகிச் சூடு நடத்திய விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள மாலிப்பூரில் நேற்று இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் பொதுமக்கள் மீது சரமாரியாக சுட்டனர். பின்னர், உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மர்ம நபர்கள் நடத்திய துப்பாகி சூட்டில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், 11 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பாட்னாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்,  மர்ம நபர்கள் பொதுமக்கள் மீது துப்பாகிச் சூடு நடத்திய விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.