states

img

“இந்தியா” கூட்டணியில் நீடிக்கிறோம்!

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  காங்கிரஸ், திமுக என 28 கட்சிகள் ஒன்றிணைந்து “இந்தியா” என்ற பெயரிலான புதிய கூட்டணியில் 2024 மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளது. தற்பொழுது “இந்தியா” கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடை பெற்று வரும் நிலையில், மேற்கு  வங்கத்தில் மட்டும் தனித்து போட்டி யிடப்போவதாக திரிணாமுல் காங்கி ரஸ் அறிவித்துள்ளது.

இதுதொடர் பாக மேற்குவங்க முதல்வரும், திரி ணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறுகையில்,”சில மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் தனித்து போராட வேண்டிய நிலை  ஏற்படும். இதனால் மேற்குவங்கத் தில் தனித்து போட்டியிட முடிவு செய்  துள்ளோம்.

மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட்டாலும் பாஜக வை வீழ்த்த இந்திய அளவில் செய்ய  வேண்டியதை செய்வோம். மக்கள வைத் தேர்தலில் தனித்துப் போட்டி யிட்டு, தேர்தல் முடிவுக்குப் பிறகு  காங்கிரஸ் கட்சியுடன் இணை வோம்” என அவர் கூறியுள்ளார்.  42 மக்களவை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - காங்கிரஸ் கூட்டணி அமைத்து களமிறங்கும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற தேர்தல் போல தனித்து களமிறங்குகிறது.

பஞ்சாப்: ஆம் ஆத்மி பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்  புதனன்று அளித்த பேட்டியில், “வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகு திகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப்  போட்டியிடும். இதில் சமரசம் செய்து  கொள்ள மாட்டோம். பஞ்சாபில் காங்கிரஸுடன் கூட்டணி கிடை யாது” என அறிவித்துள்ளார்.

பஞ்  சாப், தில்லி,ஹரியானா, கோவா,  குஜராத் உள்ளிட்ட 5 மாநிலங்களில் “இந்தியா” கூட்டணியில் உள்ள  காங்கிரஸ் - ஆம் ஆத்மி ஆகிய கட்சி களுக்கு இடையே தொகுதி உடன் பாடு ஏற்பட்டதாக சமீபத்தில் இரு கட்சிகளும் அறிவித்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் மட்டும்  தனித்து போட்டி என தற்போது அறி வித்துள்ளது.