states

img

எவரெஸ்ட் சிகரத்தில் 29-ஆவது முறையாக ஏறி கமி ரீட்டா ஷெர்பா சாதனை

காத்மாண்டு, மே 13- நேபாளத்தின் புகழ்பெற்ற மலையேற்ற வீரரான கமி ரீட்டா ஷெர்பா ஞாயிற்றுக்கிழமை உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 29-ஆவது முறையாக ஏறி, அதிகமுறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறியவா் என்ற தனது முந்தைய சாதனையைத் தானே முறியடித்துள்ளார்.

54 வயதான கமி ரீட்டா ஷெர்பா ஞாயிற்றுக்கிழமை காலை 7:25 மணிக்கு 8,848 மீட்டர் உயரத்தை 29-ஆவது முறையாக ஏறி சாதனை புரிந்தார் என நேபாள சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்ச கத்தின் இயக்குநா் ராஜேஷ் குருங் தெரிவித்தார்.

எவரெஸ்ட் மலையேறும் பய ணத்தில் துணை ஊழியராக கமி  1992-இல் பணியாற்றத் தொடங்கினார். அப்போதிலிருந்து, கமி பயமின்றி பல பயணங்களை மேற்கொண்டார். முதல் முறையாக 1994-ஆம் ஆண்டு  தனது 24-ஆவது வயதில் எவரெஸ்ட் சிக ரத்தை (29,032 அடி) அடைந்தார். எவ ரெஸ்ட் சிகரத்தைத் தவிர பாகிஸ்தா னில் உள்ள உலகின் இரண்டாவது மிக உயரமான மலை உட்பட 8,000 மீட்டர் உயரமுள்ள மற்ற சவாலான சிகரங்களிலும் ஏறி அவர் சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஒரே ஆண்டில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி 28- ஆவது முறையாக சாதனையைப் பதிவு செய்தார்.  

அவரின்  29-ஆவது எவரஸ்ட் பயணத்தில் அவருடன் 20 மலையேற்ற வீரா்கள் பயணித்தனா். அதில் 13 போ் நேபாளத்தைச் சோ்ந்தவா்கள். மீத முள்ளவா்கள் அமெரிக்கா, கனடா மற்றும் கஜகஸ்தான் நாடுகளைச் சோ்ந்தவா்கள். அனைவரும் ஞாயிற்றுக் கிழமை வெற்றிகரமாகச் சிகரத்தை அடைந்தனா்.  

எட்மண்ட் ஹிலாரி மற்றும் ஷெர்பா டென்சிங் நோர்கே ஆகி யோர் 1953- ஆம் ஆண்டு முதல் எவ ரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். அன்று முதல் மலையேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேபாளம் உலகின் மிக உயர மான பத்து சிகரங்களில் எட்டுக்கு தாயக மாக உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

;