states

img

நாகலாந்தில் கிளர்ச்சியாளர்கள் என நினைத்து 14 பழங்குடிகளை சுட்டுகொன்ற பாதுகாப்பு படையினர்

நாகாலாந்து மாநிலத்தில் கிளர்ச்சியாளர்கள் என கருதி பழங்குடியினரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் சனிக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் உள்ளது மோன் மாவட்டம். இங்குள்ள ஒடிங் பகுதியில் என்.எஸ்.சி.என் (கே) மற்றும் அல்ஃபா ஆகிய கிளர்ச்சிக்குழுக்களை தடுக்க பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  அப்போது, பணி முடித்துவிட்டு வேனில் வந்த சுரங்க தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக் கருதி, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில், பழங்குடியினர் 14 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் நெய்ப்யூ ரியோ, உயர்மட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.