states

img

நடிகர் கைகலா சத்யநாராயணா காலமானார்

தெலுங்கு திரைப்பட நடிகர் கைகலா சத்யநாராயணா (வயது 87) இன்று காலை காலமானார்.

தெலுங்கில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகர் கைகலா சத்யநாராயணா. சில மாதங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின், குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் கைகலா சத்யநாராயணாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

தமிழில், பஞ்சதந்திரம், அருந்ததி, பெரியார் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.