தெலுங்கானாவில் மாணவர் ஒருவர் ஓடும் ரயில் முன் ரீல் எடுக்க முயன்றவர் மீது ரயில் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்தவர் அக்ஷய் ராஜ் ( 17 ) பிளஸ்ட் 2 படித்து வந்தார். இவர் ஓடும் ரெயில் அருகே நெருங்கி ஆக்ஷன் ஹீரோவாக போஸ் கொடுத்து ரீல் வீடியோ எடுக்க முயன்று உள்ளார். ஆனால் வேகமாக சென்ற ரயில் அவர் தலை மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரயில்வே காவலர் ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தில் அக்ஷய் இரத்தத்துடன் இருப்பதைக் கவனித்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அகஷய் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அக்ஷய் பின்னர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவருக்கு காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.