திருவனந்தபுரம், மே 25- கேரள சுற்றுலாவின் பிராண்ட் அம்பாசிடர்க ளாக (தூதர்) மலையாளி இளைஞர்கள் மாறி வருகின்றனர் என அமைச்சர் பி.ஏ.முஹம்மது ரியாஸ் தெரிவித்தார். சுற்றுலா கிளப்பின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை அவர் புதனன்று (மே 24) திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், 382 கல்லூரிகளில் சுற்றுலா கிளப் தொடங் கப்பட்டது. 18,000 பேர் உறுப்பினர் ஆனார்கள். சுற்றுலா கிளப் தொடங்குவதற்கான விண் ணப்பங்கள் www.tourismclubkerala.org என்ற இணையதளம் மூலம் ஏற்றுக் கொள் ளப்படும். கேரளாவில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு கல்லூரியும், ஒவ்வொரு சுற்றுலா மையத்தை யும் தத்து கிராமங்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவற்றின் பராமரிப்புக்கு கிளப்பு கள் பொறுப்பாகும். மாணவர்களின் சுறுசுறுப்பான பங்கேற்பு சுற்றுலா வளர்ச்சிக்கு வழி வகுக்கும். உலக சுற்றுலா வரைபடத்தில் கேரளா இடம் பெற்றுள்ளது. இந்த நாட்டின் தனித்துவம் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள். இங்குள்ள மக்களின் விருந்தோம்பல் மற்றும் மதச்சார்பற்ற மனப்பா ன்மையால் ‘கேரள கதை’யை சுற்றுலாப் பயணிகள் புரிந்து கொள்கின்றனர் என்றார். சுற்றுலா கழகத்தினால் நடத்தப்பட்ட ‘ஃபீல் இட் ரீல் இட்’ என்னும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகளையும் அமைச்சர் வழங்கினார். கோழிக்கோட்டைச் சேர்ந்த என்.அஸ்லீம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எல்.வைசாக் ஆகியோர் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றனர். சுற்றுலாத் துறை இயக்குநர் பி.பி.நூஹ், கூடுதல் இயக்கு நர் பிரேம்கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.