தில்லிக்குள் புகுந்த யமுனை வெள்ளம் வெள்ளத்தில் மிதக்கும் என்சிஆர், மயூர் விஹார்
புதுதில்லி வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொ டர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களைப் போல வே தலைநகர் தில்லியில் திங்க ளன்று இரவு மேகவெடிப்புக்கு நிக ராக கனமழை வெளுத்து வாங்கி யது. இதனால் யமுனை நதியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந் தது. யமுனையில் வெள்ள அபாய அளவை தாண்டி நீர் வெளியேறி யதால் தில்லி-என்சிஆர், மயூர் விஹார், டிரான்ஸ் யமுனா, கிழக்கு தில்லி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் சிக்கின. இதனால் தில்லி மக்கள் இயல்புநிலை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளத்திற்கு காரணம் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணை யின் மதகுகளை பாஜக ஆளும் தில்லி அரசு அதிகாரிகள் முன் னெச்சரிக்கை இல்லாமல் திறந்து விட்டனர். இதனால் தில்லி-குரு கிராம் எல்லை, தில்லி-என்சிஆர், மயூர் விஹார், டிரான்ஸ் யமுனா உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி உருக்குலைந்துள்ளன. தில்லியில் யமுனை கரையோ ரத்தில் 6 மாவட்டங்கள் உள்ளன. இதில் தாழ்வான பகுதிகளில் சுமார் 15,000 பேர் வசிக்கின்றனர். அதே நேரத்தில் சுமார் 5,000 பேர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகு திகளில் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர். ஆனால் ஆளும் பாஜக அரசு யமுனை நதியின் கரை யோரப் பகுதிகளில் வசிக்கும் மக்க ளை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மட்டுமே அறிவுறுத்தி யுள்ளது. வேறு எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. கனமழை காரணமாக தில்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் 7-8 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குருகிராமில் பெய்த கனமழையால் தில்லி - குரு கிராம் நெடுஞ்சாலையிலும்போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. யமுனை நதியில் தொடர்ந்து வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டு வருவதால், பழைய ரயில் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று தில்லி பேரி டர் மேலாண்மை ஆணையம் தெரி வித்துள்ளது.
