மணல் கடத்தலை தடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரியின் சாதி என்ன பதிலளிக்குமாறு யுபிஎஸ்சிக்கு கோரிக்கை விடுத்த பாஜக கூட்டணி கட்சி
மும்பை மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல மைச்சராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர்க ளாக ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா), அஜித் பவார் (தேசியவாத காங்கிரஸ்) உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் சோலாப்பூர் மாவட்டம் கர்மலா அருகே அஞ்சனா கிருஷ்ணா ஐபிஎஸ் அதிகாரி மணல் கடத்தலை தடுத்து நிறுத்தினார். மணல் கடத்தல் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் தலைமையில் நடைபெற்றது. உடனே அக்கட்சி நிர்வாகி தனது தலைவரும், துணை முதலமைச்சருமான அஜித் பவாரிடம் கூறி, அவரிடம் பேசுமாறு மொபைல் போனை அஞ்சனா கிருஷ்ணாவிடம் கொடுத்தார். பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதித்த அஜித் பவார் அப்போது அஜித் பவார்,”உங்களுக்கு எதிராக நான் கடும் நடவடிக்கை எடுப்பேன். என்னை பார்க்க வேண்டுமா? உங்களது வாட்ஸ் அப் எண்ணை கொடுங்கள். எனது முகத்தை நீங்கள் பார்க்க முடியும். உங்களுக்கு என்ன தைரியம். மணல் கடத்தலை தடுக்க எந்த நட வடிக்கையும் எடுக்க வேண்டாம்” என பெண் ஐபிஎஸ் அதிகாரி என்று கூட பாராமல் மிரட்டி யுள்ளார். இதனை அஞ்சனா கிருஷ்ணாவின் அருகே இருந்த அரசு உதவியாளர் ஒருவர் சமூகவலைத்தளங்களில் ஆடியோ கலந்த வீடியோவுடன் வைரலாக்க அஜித் பவாரின் அடாவடி செயலுக்கு காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்) உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதே போல வீடியோ சமூகவலைத்தளங்களில் டாப் டிரெண்டிங்கில் வைரலாகி வருவதால் நாடு முழுவதும் மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசுக்கும், அஜித் பவாருக்கும் நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்தன. மழுப்பல் இதனால் பதற்றமடைந்த பெண் அதிகா ரியை மிரட்டி விட்டு அஜித் பவார்,”சட்ட அம லாக்கத்துறையின் பணிகளில் தலையிடும் எண்ணம் ஏதும் தனக்கு இல்லை. அந்த இடத்தில் பிரச்சனை மேலும் பெரிதாகாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்ப தற்காகவே தலையிட்டேன். காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது உயர்ந்த மதிப்பை வைத்துள் ளேன். தைரியத்துடனும் நேர்மையுடனும் பணி யாற்றும் பெண் அதிகாரிகள் மீது நல்ல மதிப்பு கொண்டுள்ளேன்” என மழுப்பலாக கூறினார். சாதி என்ன? இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் (அஜித்) மூத்த தலைவரும், எம்எல்சியுமான அமோல் மிட்காரி,”கேரள ஐபிஎஸ் அதிகாரி அஞ்சனா கிருஷ்ணாவின் கல்வி மற்றும் சாதிச் சான்றிதழ்களை யுபிஎஸ்சி சரிபார்க்க வேண்டும். அவர் எப்படி ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்” என கேள்வி எழுப்பினார். அமோல் மிட்காரி இந்த அடாவடி கருத்துக்கு “இந்தியா” போராட்ட எச்சரிக்கை விடுத்துள் ளன. குறிப்பாக ஐபிஎஸ் அதிகாரியான அஞ்சனா கிருஷ்ணா மகாராஷ்டிராவில் அவமதிக்கப் பட்டதற்கு கேரளாவிலும் கண்டனம் குவிந்து வருகின்றன. இந்த கண்டனங்களுக்கு இடையே அமோல் மிட்காரி,”இது எனது கட்சியின் (தேசியவாத காங்கிரஸ் (அஜித்)) நிலைப்பாடு அல்ல; இது எனது தனிப்பட்ட கருத்து. காவல்துறை மற்றும் அதன் அதிகாரிகளை நான் மிகவும் மதிக்கிறேன்” என பாஜகவினர் மற்றும் அஜித் பவாரைப் போல மழுப்பலாக கூறி சமாளிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இத்தகைய சூழலில், இந்த விவகாரம் தொ டர்பாக வாய் திறக்காமல் முதலமைச்சர் பட்னா விஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அமைதியாக இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.