states

img

மணிப்பூரில் மீண்டும் வன்முறை முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீதும் தாக்குதல்

பாஜக ஆளும் வட கிழக்கு மாநிலங்  களில் ஒன்றான மணிப்பூர் கடந்த ஒரு வரு டத்திற்கு மேலாக வன்முறை  சம்பவங்களால் பற்றி எரிந்து  வருகிறது. வன்முறைக்கு இதுவரை 200க்கும் மேற் பட்டோர் பலியாகியுள்ள நிலையில், பல லட்சம் மக்  கள் வீடுகளை இழந்து சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வரு கின்றனர். குறிப்பாக வன்  முறை சம்பவங்கள் இல்லாத  நாட்களே இல்லாத சூழல் மணிப்பூரில் உள்ள நிலை யில், வன்முறைக்கு காரண மான மாநில பாஜக அரசோ இன்னும் ஆட்சியில் இருந்து  வெளியேறாமல் மேற் கொண்டு வன்முறையை தூண்டி வருகிறது.  இந்நிலையில், மக்க ளவை தேர்தல் முடிந்த பின்பு  மணிப்பூரின் பெரும்பாலான பகுதியில் மீண்டும் வன் முறை சம்பவங்கள் அரங் கேறி வரும் நிலையில், ஜிரி பாம் மாவட்டத்தில் சோய்பம்  சரத்குமார் சிங் (59) என்ப வரை ஆயுதமேந்திய மர்ம கும்பல் கொலை செய்தது. இதனால் அப்பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில்,  அப்பகுதியில் காவல்நிலை யம் மற்றும் 70க்கும் மேற்  பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்  பட்டது.  இத்தகைய சூழலில் மணிப்பூர் முதல்வர் பைரேன்  சிங் திங்களன்று ஜிரிபாம்  மாவட்டத்திற்கு சுற்றுப்பய ணம் மேற்கொள்வதாக அறி வித்தார். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் செல்லும் சாலைகளில் பாது காப்புக்காக போலீசார் நிறுத் தப்பட்டனர். முதல்வரின் பாதுகாப்பிற்காக அவரது  தனி பாதுகாப்பு குழுவினர்  இம்பாலில் இருந்து வன் முறையால் பாதிக்கப்பட்ட பகுதியான ஜிரிபாம் நோக்கி  புறப்பட்டுச் சென்றனர். அப்பொழுது காங்போக்பி  மாவட்டம் கே.சினாம் கிரா மம் அருகே சென்றபோது, சாலையோரம் பதுங்கியி ருந்த மர்ம நபர்கள் திடீ ரென பாதுகாப்பு வாகனம்  மீது தாக்குதல் நடத்தினர்.  இதில் பாதுகாவலர் ஒருவ ருக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்  லப்பட்டார். இந்த சம்பவத் தால் மாநிலம் முழுவதும் பர பரப்பு ஏற்பட்டது. விளக்கம் கேட்கும் பைரேன் சிங் பாதுகாப்பு வாகனம் மீதான  தாக்குதலைத் தொடர்ந்து, ஜிரிபாம் பகுதியில் உள்ள  நிலைமை குறித்து விரிவான  அறிக்கை தாக்கல் செய்யும்  படி பாதுகாப்பு ஆலோசகரி டம் அம்மாநில முதல்வர் பைரேன் சிங் கேட்டுள்ளார்.

;