states

img

உத்தரகண்ட் அரசுப் பணியாளர் தேர்வில் முறைகேடு; ரூ.200 கோடி சுருட்டிய பாஜக பிரமுகர் ஹகம்சிங்!

டேராடூன், செப்.3- உத்தரகண்ட் மாநில அரசுப் பணி யாளர் தேர்வு முறைகேடு மூலம் பாஜக  பிரமுகர் ஹகம் சிங் ரூ. 200 கோடி வரை  கொள்ளை அடித்திருப்பது அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாசி மாவட்டத்தைச் சேர்ந்த வர் ஹகம்சிங். 2002 ஆம் ஆண்டு மாஸ்தி ரேட் ஒருவரிடம் சமையல்காரராக வேலைக்கு சேர்ந்த இவர், ஹரித்வா ரில் தங்கியிருந்தபோது சில அரசி யல்வாதிகளை சந்தித்து படிப்படியாக அரசியலில் நுழைந்தவர். 2008-2013  வரை உத்தரகாசியில் உள்ள லிவாரி கிராமத்தின் தலைவரான இவர், பின்  னர், உத்தர்காசி மாவட்ட ஊராட்சி  உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட் டார். பாஜகவில் முக்கியப் பிரமுகராக வலம் வந்தார். இந்நிலையில்தான், உத்தரகண்ட் மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கடந் தாண்டு 854 பணியிடங்களுக்கான தேர்வை நடத்திய நிலையில், ஹகம் சிங் வினாத்தாள் முறைகேட்டில் ஈடு பட்டு, ரூ. 200 கோடி ரூபாய் அளவிற்கு சுருட்டியுள்ளார்.

ஒரு வினாத்தாளை ரூ.  10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான விலைக்கு 200-க்கும் மேற்பட்டவர் களுக்கு விற்றுள்ளார். லக்னோவைச் சேர்ந்த டெக்- சொல்யூஷன்ஸ் தனியார் நிறுவ னத்தின் உரிமையாளர் மற்றும் பணி யாளர் மூலம் வினாத்தாள் நகல் கசிந்த தாகக் கூறப்படுகிறது. இந்த மோச டிக்கு ஹகம் சிங், அவரது நெருங்கிய உதவியாளரும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கேந்திரபால், சந்தன் மன்ரல்,  மனோஜ் ஜோஷி மற்றும் ஜகதீஷ் கோஸ்வாமி ஆகியோர் மூளையாக செயல்பட்டுள்ளனர். இவர்கள் மோசடி  செய்த பணத்தில் ரூ. 50 கோடி வரை  சொத்துக்கள் வாங்கி குவித்துள்ள னர். தற்போது, ஹகம் சிங் உட்பட  இதுவரை 32 பேர் கைது செய்யப்பட் டுள்ள நிலையில், ஹகம் சிங்கை பாஜக கட்சியிலிருந்து தற்போது நீக்கியுள் ளது. தனது பொறுப்பில் அலட்சியம் காட்டியதற்காக பப்ளிக் சர்வீஸ் கமி ஷனின் செயலாளர் சந்தோஷ் படோ னியையும் உத்தரகண்ட் பாஜக அரசு  இடைநீக்கம் செய்துள்ளது.