states

img

பாஜகவினர் பெரும் நம்பிக்கை உ.பி. தேர்தல் வெற்றிக்கு ராமர் கோயில் உதவும்!

புதுதில்லி, டிச. 11 - அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவ தன் மூலம், உத்தரப் பிரதேச சட்டப்பேர வைத் தேர்தலில், தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று பாஜக-வினர் பெரும் நம்பிக்கை வைத்திருப்பதாக ஏபிபி - சிவோட்டர் (ABP - CVoter) சர்வே தெரி வித்துள்ளது. 2022-இல் நடைபெறவுள்ள உ.பி. தேர்தல் தொடர்பாக, ‘ஏபிபி’ செய்தி நிறுவ னமும் - ‘சி வோட்டரும்’ கடந்த செப்டம்பர் முதல் தொடர் கருத்துக் கணிப்பை (ABP - CVoter Survey) நடத்தி, முடிவுகளை வெளி யிட்டு வருகின்றன. ஏற்கெனவே நடத்திய 3 கருத்துக் கணிப்புகளின் முடிவில், 2017 தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி கைப்பற்றிய 325 இடங்கள், இம்முறை அந்தக் கூட்டணிக்கு கிடைக்காது; 100-க்கும் மேற்பட்ட இடங்களை அந்தக் கூட்டணி இழக்கும் என்று ஏபிபி - சிவோட்டர் கூறியுள்ளது. அதேநேரம் குறைந்தபட்ச பெரும்பான்மையுடன் பாஜகவே மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது என்றும் தெரி வித்துள்ளது. இந்நிலையில், பாபர் மசூதி இடிக்கப் பட்டதன் 29-வது நினைவு நாளையொட்டி நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பு முடிவு ஒன்றையும் ஏபிபி - சிவோட்டர் வெளி யிட்டுள்ளது.

அதில், 2022 உ.பி. தேர்த லில் அயோத்தி ராமர் கோவில் மூலம் தங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று பாஜகவினர் பெரும் நம்பிக்கை வைத்தி ருப்பதாக கூறப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட வர்களில் 58.6 சதவிகிதம் பேர், ராமர் கோவிலால் பாஜக-வுக்கு லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். 41.4 சதவிகி தம் பேர் லாபம் கிடைக்காது என்று தெரிவித் துள்ளனர். பாஜக ஆதரவாளர்களைப் பொறுத்த வரை, அவர்களில் 79.2 சதவிகிதம் பேர், ராமர் கோவில் விவகாரம் தேர்தலில் தங்க ளுக்கு உதவும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் ஆதரவாளர்களிலும் 51.9 சத விகிதம் பேர் இதனை ஒப்புக் கொள்கின்ற னர். இதேபோல பகுஜன் சமாஜ் கட்சியினர் 35.7 சதவிகிதம் பேரும், சமாஜ்வாதி கட்சியினர் 31.3 சதவிகிதம் பேரும், ராமர் கோவிலால் பாஜக பலனடையும் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், உ.பி. தேர்தலில் வென்றால் பாஜக வென்றால் அதற்கு ராமர் கோவில்தான் காரணமாக இருக்கும் என்று 50.6 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.

;