அலகாபாத், பிப். 25 - ஒன்றிய மற்றும் உ.பி. மாநில பாஜக ஆட்சியில் படித்த இளை ஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்கா மல் பெரும் துயரத்தை அனுபவித்து வருவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் குற்றம் சாட்டியுள்ளார். ஐந்தாவது கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் ஒருபகுதியாக, ஹாடியா தொகுதியில் வியாழக் கிழமையன்று அகிலேஷ் உரையாற் றினார். அப்போது அவர் கூறியதாவது: “சாதாரண செருப்பை அணிந்து நடப்பவா்களை விமானத்தில் பறக்க வைப்பேன் என்று பிரதமா் நரேந்திர மோடி முன்பு பேசினார். ஆனால், இப்போது பொதுத்துறை வச மிருந்த ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனத்தையே அவர் தனி யாருக்கு விற்பனை செய்துவிட் டார். விமான நிலையங்களின் கட்டுப் பாடு, பிரதமருக்கு வேண்டியவரின் (அதானி) நிறுவனத்துக்கு ஏலம் போடப்படுகிறது. ஒன்றிய பாஜக அரசு ஆட்சியில் அமா்ந்ததில் இருந்து,
இந்த நாட்டின் சொத்துக் களான பொதுத்துறை நிறுவனங் களை விற்பனை செய்வதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறது. வேலைவாய்ப்புக்களை உரு வாக்குவதிலும், மக்களுக்கு உரிய சலுகைகளை அளிப்பதிலும் அது அக்கறை காட்டுவதாக இல்லை. நாட்டில் படித்த இளைஞா்கள் பலா் உரிய வேலைவாய்ப்பு இன்றி துயரப்பட்டு வருகின்றனா். கடந்த 3 ஆண்டுகளாக ராணு வத்தில் கூட எவ்வித ஆட்சோ்ப்பு முகாமும் நடைபெறவில்லை. முப்படைகளிலும் 1 லட்சத்து 22 ஆயிரம் பணியிடங்கள் காலி யாக உள்ளதாக பாதுகாப்புத் துறை இணையமைச்சா் கூறுகிறார். இவ்வாறு ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருந்தும், மக்களுக்கு எவ்விதத்திலும் பயனளிக்காத பாஜக-வுக்கு மக்கள் ஏன் வாக்களிக்கவேண்டும்?. இவ்வாறு அகிலேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.