states

img

தோழர் ஷம்சுல் ஹக் காலமானார் - திரிபுரா சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர்

அகர்தலா, ஜூலை 21- திரிபுரா மாநிலத்தின் சிபிஐ(எம்) மூத்த தலைவரும், எம்எல்ஏவு மான தோழர் ஷம்சுல் ஹக் மார டைப்பால் காலமானார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், போக் சாநகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஷம்சுல் ஹக் (67) மாரடைப்பால் புதனன்று அதி காலை  உயிரிழந்தார். செவ்வாயன்று ஷம்சுல் ஹக்கிற்கு லேசான அளவில் மார டைப்பு ஏற்பட அகர்தலாவில் உள்ள கோவிந்த் பல்லப் பந்த் (ஜிபிபி) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சையில் இருக்கும் பொழுதே ஷம்சுல் ஹக்கிற்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த பொழுதிலும், ஷம்சுல் ஹக்கின் உயிரை காப் பாற்ற முடியவில்லை. மறைந்த ஹக் கிற்கு மனைவி மற்றும் நான்கு மகன்கள் உள்ளனர்.

வகுப்புவாத கலவரத்திற்கு எதிராக துடிப்பாக போராடியவர்

1974இல் விவசாயிகள் இயக் கத்தின் மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ஷம்சுல் ஹக், பஞ்சாயத்து தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். மத மோதல் அதிகம் நடைபெறும் இடமாக இருந்த போக்சாநகர் பகுதியில் வகுப்புவாத கலவரத்திற்கு எதி ராக துடிப்பாக போராடிய ஷம்சுல் ஹக், பின்னர் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக தேர்வு செய் யப்பட்டார். 2023 மார்ச்சில் சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவின் பல்வேறு அராஜகங்களுக்கு எதி ராக போராடி போக்சாநகர் தொகுதி யில் வெற்றி பெற்று முதல் முறை யாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். மறைந்த தோழர் ஷம்சுல் ஹக் உடல் புதனன்று மாநில சட்டசபை கட்டிடத்திற்கு கொண்டு வரப் பட்டது. அங்கு சிபிஐ(எம்) உள்ளிட்ட இடது முன்னணி தலைவர்கள், காங்கிரஸ், பாஜக, திப்ரா மோதா எம்எல்ஏ-க்கள், துணை சபாநாயகர் ராம்பிரசாத் பால் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஷம்சுல் ஹக்கின் உடல் அகர்தலா மேலார்மாத்தில் உள்ள சிபிஐ(எம்) மாநில தலை மையகத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினருமான மாணிக் சர்க்கார், அவரது மனைவியும் சமூக சேவை  ஆர்வலருமான பாஞ்சாலி பட்டாச் சார்யா, முன்னாள் அமைச்சர் மாணிக் டே மற்றும் சிபிஐ(எம்) மாநிலச்செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி உள்ளிட்ட தலைவர்கள், தோ ழர்கள், அப்பகுதி மக்கள்  இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு ஷம்சுல் ஹக்கின் உடல் சொந்த கிராமமான குலுபாரி யில்  தகனம் செய்யப்பட்டது.

 சவுத்ரி இரங்கல்

“ஷம்சுல் ஹக் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினராகவும், நீண்ட கால மாக கட்சி ஊழியராகவும் இருந் தார். பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அவர், 2023 சட்ட மன்றத் தேர்தலின் போது முதன் முறையாக போக்சாநகர் சட்ட மன்றத் தொகுதியில் இருந்து  எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப் பட்டார். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஷம்சுல் ஹக் அனைவராலும் நேசிக்கப்பட்ட கனிவான மனிதர். அவரது இழப்பு மிகப்பெரியது, ஈடுசெய்ய முடியாதது” என ஜிதேந்திர சவுத்ரி கூறியுள்ளார்.