தில்லியில் சோகம் வீட்டின் சுவர் இடிந்து 8 பேர் பலி
தில்லி கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் பெய்த கனமழை யால் தில்லி நகரம் வெள்ளக்காடாய் மாறியுள்ளது. இந்நிலையில், ஜெய்த்பூரில் உள்ள ஹரிநகர் பகுதியில் சனிக்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சப்தர்ஜங் மருத்துவமனை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். ஆனால் வீட்டில் இருந்த ஷபிபுல் (30), ரபிபுல் (30), முட்டு அலி (45), ரூபினா (25), டோலி (25), ஹாஷிபுல் (35) மற்றும் குழந்தைகள் ருக்சானா (6), ஹசினா (7) ஆகிய 8 பேரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
