states

img

தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்களே அதன் தாக்குதலுக்கு பொறுப்பு

புதுதில்லி, செப்.10- தெருநாய்களுக்கு உணவளிப்பவர்கள், அவற்றின் தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.  கேரளாவில் தெருநாய் பிரச்சனை தொடர்பான மனுவை பரிசீலிக்கும் போது நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் இதை அறிவித்தனர். கேரளாவில் தெருநாய் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், செப்டம்பர் 28-ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக தெளிவுபடுத்தியுள்ளது. தெருநாய்க ளுக்கு உணவளிப்பவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டிய பொறுப்பு உள்ளது என நீதிமன்றம் கூறி யுள்ளது. தெரு நாய் கடி புகார்களை விசாரிக்க 2016 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நீதிபதி சிகிஜகன் கமிட்டியின் அறிக்கை கேட்டு வாங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாலையில் நடந்து செல்பவர்களை நாய்கள் கடிப்பதை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் கூறி யுள்ளது. ஆபத்தான நாய்களை சிறப்பு மையத்திற்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாமா என்று விசார ணையின் போது நீதிமன்றம் கேட்டது. தடுப்பூசி போடப் பட்ட போதிலும் மரணம் ஏற்படுவதாக மனுதாரரால் சுட்டிக் காட்டப்பட்டபோது, இதுகுறித்து விரிவாக ஆராய வேண்டும் என்று நீதிமன்றம் பதிலளித்தது.

;