உத்தரப் பிரதேச மாநி லம் லக்னோ மாவட்டம் பக்ஷிகாதலாப் பகுதி யில் இந்திய விமானப் படையின் படைத்தளம் அமைந்துள்ளது. இந்த விமானப் படைத்தளத்தில் இருந்து கடந்த நவம்பர் 27 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோதாப்பூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு லாரி மூலம் ராணுவ உப கரணங்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், லக்னோவில் உள்ள ஐஸ்யானா நகர் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது அதில் ஏறிய மர்மநபர்கள் விமானப் படைத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மீரஜ் ரக போர் விமானத்தின் டயர்களை திருடிச் சென்றுள்ளனர்.