புதுதில்லி, ஜூலை 7 - இந்தியாவில் தற்போது தேசிய எழுச்சிப் பணி நடப்பதாகவும், அதற்கு அறிவார்ந்த சத்ரியர்கள் தேவை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். புத்தக வெளியீட்டு விழா ஒன்றில், இது தொடர்பாக அவர் மேலும் பேசியிருப்ப தாவது: சமுதாயத்திற்கு வழிகாட்ட, லட்சிய அரசனின் அடையாளத்தை நிறுவுவது அவசியமாக உள்ளது. ராமருக்கு பிறகு சத்ரபதி சிவாஜி மகாராஜை சிறந்த அரசராக சமர்த் ராம்தாஸ் கருதினார். சமர்த் ராம்தாஸ் இருந்த காலம் படையெடுப்புகளால் குறிக்கப்படும் காலமாக இருந்தது. இந்த படையெடுப்புகளுக்கு சத்ரபதி சிவாஜி மகாராஜ் பதிலளித்தார். போராடுவது மதத்தை பாதுகாப்பதில் ஒரு அம்சம் மட்டுமே. ஆனால் மதத்தை பாதுகாப்பது என்பது சண்டையிடுவது மட்டும் அல்ல. எதிர்ப்பது, அறிவூட்டுவது, ஆராய்ச்சி செய்வது மற்றும் பயிற்சி செய்வதும் மதத்தை பாதுகாப்பதற்கான வழிகள். தற்போது காலம் மாறிவிட்டாலும், நாம் இன்னும் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். முக்கியமான ஒன்று, நாம் இப்போது அடிமைகள் அல்ல. நாம் சுதந்திரமானவர்கள். ஆனால் நம் அடிமை மனநிலை போய்விட்டதா? அவர்களின் படையெடுப்பு இன்று இல்லையா?. நேரடி படையெடுப்புகள் இல்லாவிட்டாலும், அவை உள்ளன. ஒன்று மேற்கு எல்லை யிலும் மற்றொன்று வடக்கு எல்லையிலும் உள்ளன. கடந்த 2000 ஆண்டுகளில் பல சோதனை கள் நடந்தன. ஆனால் பல பிரச்சனை களுக்கு தீர்வு கிடைக்காமல் உலகம் இப்போது சோர்வடைந்துள்ளது. இந்த கேள்விகளுக்கு இந்தியா பதில் அளிக்க முடியும் என்று இப்போது உலகம் நினைக் கிறது. இந்தியா பதில்களை வழங்க தயாரா? பிரச்சனைகளுக்கு பதிலளிக்கக்கூடிய ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்பதை நாம் (இந்தியர்கள்) அறிந்திருக்கிறோமா?. இந்தியாவில் தற்போது தேசிய எழுச்சிப் பணி நடந்து வருகிறது; நாட்டுக்கு அறிவார்ந்த சத்ரியர்கள் தேவை. இவ்வாறு மோகன் பகவத் குறிப்பிட்டுள்ளார்.