states

இந்திய பெரும் பணக்காரர் எண்ணிக்கை 2026இல் 2 மடங்காக அதிகரிக்கும்

புதுதில்லி, செப்.22- இந்தியாவில் தற்போதுள்ள பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை, 2026-ஆம் ஆண்டில், அப்படியே 2 மடங்காக அதிக ரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான ‘கிரெடிட் சூயிஸ்’ (Credit Suisse) உலக சொத்து அறிக்கை ஒன்றை (Group AG’s Global Wealth Report - 2022) வெளியிட்டுள்ளது. அதில், 2021 ஆம் ஆண்டில், இந்தியா வில் 7 லட்சத்து 96 ஆயிரம் பேர்களாக இருந்த  பெரும்பணக்காரர்கள் (சுமார் 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவர்கள்) எண்ணிக்கை, 2026-ஆம் ஆண்டில் 105 சதவிகிதம் அதிகரித்து 16.23 லட்சமாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. 2000-ஆவது ஆண்டிலிருந்து இந்தியா வில் வயது வந்தோருக்கான சொத்து மதிப்பு 8.8 சதவிகித சராசரி ஆண்டு விகிதத்தில் உயர்ந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக அளவில் 1 மில்லியன் டாலருக்கு மேல் (சுமார் 8 கோடி ரூபாய் அதிகமாக) சொத்து மதிப்பைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 25 லட்சமாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2026-ஆம் ஆண்டில் 8 கோடியே 75 லட்சமாக உயரும். 1 கோடிக்கும் அதிகமான புதிய கோடீஸ்வ ரர்களாக உருவாவார்கள்.

உலகப் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான தரவரிசை யில், தற்போது, அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. உலகப் பெரும்பணக்காரர்களில் 39 சதவிகிதம் பேர் அமெரிக்காவில் உள்ள னர். இது 2026-இல் மேலும் 13 சதவிகிதம் அதிகரிக்கும். சீனா தற்போது 2-ஆவது இடத்தில் உள்ளது. 2021 இல் சீனாவில் 62 லட்சம் பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர். இந்த எண்ணிக்கை 2026 இல் 97 சத விகிதம் அதிகரித்து 1.2 கோடியாக அதிக ரிக்கும். அதேசமயம் இந்தியா உலகப் பெரும்பணக்காரர்கள் எண்ணிக்கையில் 1 சதவிகிதத்தை (சுமார் 8 லட்சம் பேர்கள்) மட்டுமே கொண்டுள்ளது. 2021-ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால், சொத்துக் குவிப்பு தரவரிசை யில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள் ளது. அதைத்தொடர்ந்து சீனா, கனடா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளன. 2021 ஆம் ஆண்டின் இறுதியில், இந்தியா வின் சராசரி சொத்து மதிப்பு 41 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், சீனாவில் சராசரி சொத்து மதிப்பு 338 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில், உலகில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 40 சத விகிதம் அதிகரிக்கும். 4.2 சதவிகித வளர்ச்சி யையே பெற்றாலும், வளரும் பொருளா தாரத்தைக் கொண்ட நாடுகளின் செல்வம் ஆண்டுதோறும் 10 சதவிகிதம் அளவிற்கு வளரும் என்று ‘கிரெடிட் சூயிஸ்’ கணித் துள்ளது. “குறைந்த மற்றும் நடுத்தர வரு மானம் கொண்ட நாடுகள் வேகமாக வளர்ந்து வருவதால், பணக்கார நாடுகளுக் கும் நடுத்தர பணக்கார நாடுகளுக்கும் இடை யிலான வித்தியாசம் குறைந்துள்ளது” என்று ‘கிரெடிட் சூயிஸ்’ ஆசிரியரும், பொரு ளாதார நிபுணருமான ஆண்டனி ஷோராக்ஸ் தெரிவிக்கிறார். இதன்காரணமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் வளரும் நாடுகளுக்கும், வளர்ந்த நாடுகளுக்கும் இடையிலான இடை வெளி கணிசமாக குறையும் என்றும் ‘கிரெடிட் சூயிஸ்’ கூறுகிறது. இப்போதும் உலகின் 82 சதவிகித சொத்துக்கள், வெறும் 10 பணக்காரர்கள் வசமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

;