states

ஆக்ஸ்ஃபாம், மீடியா பவுண்டேசன் அலுவலகங்களில் வருமான வரி சோதனை - கேள்வி எழுப்புவோர் மீது பாய்ந்த மோடி அரசு

புதுதில்லி/சென்னை,  செப். 8 - ஒன்றிய பாஜக அரசின் கொள்கை களை விமர்சிக்கிறார்கள் என்கிற  ஒரே காரணத்திற்காக சுயேட்சை யான ஆராய்ச்சி மற்றும் சமூக ஆய்வி யல் அமைப்புகளான ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் மீதும் சுதந்திர ஊட கங்களை ஆதரிக்கும் ஊடக அறக் கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் மீதும் மோடி அரசு வருமான வரித் துறையை ஏவி சோதனை என்ற பெயரில் மிரட்டல் விடுத்துள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.  அரசாங்கங்களின் கொள்கைகள் குறித்த ஆராய்ச்சி அமைப்பான சிபிஆர் அமைப்பின் தில்லி அலுவல கத்திலும்; சமூக ஆய்வியல் மற்றும்  தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபாம்  இந்தியாவின் தில்லி அலுவலகத்தி லும்; பெங்களூரை தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் மீடியா பவுண்டேசன் அலுவலகத்திலும் வியாழனன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி யுள்ளனர்.

இதில் மீடியா பவுண்டேசன், மோடி அரசின் கொள்கைகளை ஆய்வு செய்து அதன் விளைவு களை கடுமையாக விமர்சித்து வரும்  தி கேரவன், தி பிரிண்ட் மற்றும் சுவ ராஜ்யா ஆகிய மின்னணு இதழ் களுக்கு ஒரு பகுதி நிதி உதவி அளித்து வரும் அறக்கட்டளை என்பது குறிப்பிடத்தக்கது. தி கேரவன் ஏடு, 2002 குஜராத் இனப்படுகொலையில் அன்றைய முதல்வராக இருந்த தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கு நிச்சயம் தொடர்பு உள்ளது  என்றும் அது குறித்து ஏன் விசார ணை நடத்தப்படவில்லை என்றும்  பகிரங்கமாக கேள்வி எழுப்பி, ஏராள மான விபரங்களை வெளியிட்டது என்பது நினைவுகூரத்தக்கது.  சிபிஆர் ஆய்வு அமைப்பு, பேராசிரியர் பிரதாப் பானு மேத்தாவை தலைவராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளை மிகக்கடுமையாக இவர் விமர்சித்து வருகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.  ஆக்ஸ்ஃபாம் அமைப்பானது சர்வதேச தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.  இந்தியாவில் ஆளும் அரசாங்கங்கள் இந்திய  அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ள மாண்புகளை கடைப்பிடிக்குமாறு மக்கள் தீவிரமாக வலியுறுத்த வேண்டும் என்று - கொள்கைகள் அமலாக்கம் தொடர்பான விரிவான தரவுகளுடன் தொடர் பிரச்சாரம் மேற் கொண்டுள்ள அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஎம் கண்டனம்

இந்த மூன்று அமைப்புகளையும் குறி வைத்து ஒன்றிய அரசு வருமான வரி சோதனையை ஏவியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என குறிப்பிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், “ஊழல் கள்ளக்கூட்டின் வழியாக கோடிகளில் செல்வம் குவிப்போர் மகிழ்ந்திருக்க, அதை கேள்வி எழுப்பு வோர் மீது ஒன்றிய அரசு பாய்ந்தி ருப்பது அப்பட்டமான சர்வாதிகார நட வடிக்கையே” என்று சாடியுள்ளார்.  “தங்களின் பொய்மூட்டைகளை, கேள்விகளால் அவிழ்க்கும் எவரை யும் விடக்கூடாது என்ற எத்தனிப் பிலேயே இந்த அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன. குறைந்தபட்ச விமர்சனக் குரலை கண்டு கூட மோடி அரசாங்கம் அஞ்சி நடுங்குவது இதன்வழியாக அம்பலமாகிறது. இதுபோன்ற மோசமான சதுராட்டங் களை அனைத்து மக்களும் ஒரு மித்த குரலில் கண்டிக்க முன்வர  வேண்டும்” என்றும் கே.பால கிருஷ்ணன் கூறியுள்ளார்.