states

img

ரூ. 12 லட்சம் கோடி அளவிற்கு சரிந்த அதானி குழும சந்தை மதிப்பு!

புதுதில்லி, பிப். 24 - ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ வெளி யிட்ட ஆய்வறிக்கையால் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 11 லட்சத்து 81 ஆயிரத்து 750 கோடி அளவிற்கு சரிந்துள்ளது.  அதானி குழுமம், பங்குச் சந்தை  வர்த்தகத்தில் சுமார் ரூ. 17 லட்சத்து 80  ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்திருப்பதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ (Hindenburg Research) கடந்த ஜனவரி 24 அன்று  106 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. “கொரோனாவுக்கு பிந்தைய 2 ஆண்டுகளில் அதானி குழும நிறுவனங்களின் சொத்து மதிப்பு 819 சதவிகிதம் அதிகரித்தது; இது தொடர்பாக ஆய்வுசெய்தபோது, அதானி குழுமத்தின் வளர்ச்சி நேர்மையான முறையில் பெறப்பட வில்லை என்பது தெரிய வந்துள் ளது. அதானி குழுமம், தனது  குடும்ப உறவினர்கள் மூலம் வெளிநாடு களில் போலி நிறுவனங்களைத் தொடங்கி, வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளது; அதிகப்படியான வரிச் சலுகை கொண்ட வெளிநாடுகளில் பணத்தை முறையற்ற வகையில் முதலீடு செய்து அமெரிக்கப் பத்திரம் மற்றும் இந்தியர் அல் லாத வர்த்தகப் பத்திரம் மூலம் நிறு வனத்தில் ஷார்ட் பொசிஷன் (Short Position) வைத்துள்ளது; தங்கள் நிறுவனங்களின் பங்கு மதிப்பை மோசடியாக உயர்த்திக்காட்டியுள் ளது” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தது.  இதனால், அதானி சாம்ராஜ்ய மானது சீட்டுக்கட்டு சரிவது போல சரிந்தது. அதானி குழும நிறுவனங் களின் பங்குகள் தற்போது வரை  தொடர் சரிவைச் சந்தித்து வரு கின்றன. 

‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கை வெளியான ஜனவரி 24-ஆம்  தேதியுடன் ஒப்பிட்டால் ‘அதானி டோட்டல் கேஸ்’ நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் ரூ. 3 லட்சத்து 40 ஆயிரத்து 083 கோடி அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ‘அதானி கீரின் எனர்ஜி’யின் சந்தை மதிப்பு ரூ. 2 லட்சத்து 21 ஆயி ரத்து 955 கோடியும், அதானி டிரான் ஸ்மிஷன் சந்தை மதிப்பு ரூ. 2  லட்சத்து 23 ஆயிரத்து 857 கோடி யும் சரிந்துள்ளது. இதேபோல, ‘அதானி எண்டர் பிரைசஸ்’ சந்தை மதிப்பு ரூ. 2  லட்சத்து 34 ஆயிரத்து 743 கோடி, ‘அதானி பவர்’ நிறுவன சந்தை மதிப்பு ரூ. 46 ஆயிரத்து 399 கோடி,  ‘அதானி வில்மர்’ சந்தை மதிப்பு ரூ. 25 ஆயிரத்து 773 கோடி, ‘அதானி போர்ட்ஸ்’ நிறுவன சந்தை மதிப்பு ரூ. 45 ஆயிரத்து 093 கோடி, அம்புஜா சிமெண்ட்ஸ் சந்தை மதிப்பு ரூ. 32 ஆயிரத்து 078 கோடி, ஏசிசி சந்தை மதிப்பு ரூ. 11 ஆயி ரத்து 234 கோடி, அதானி குழு மத்தால் அண்மையில் கையகப் படுத்தப்பட்ட என்டிடிவி-யின் சந்தை  மதிப்பு ரூ. 535 கோடி என்ற அள வில் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 11 லட்சத்து 81 ஆயி ரத்து 750 கோடி அளவிற்கு சரிந்துள் ளது. உலக பணக்காரர்கள் வரிசை யில் கவுதம் அதானி 26-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.