states

img

ஜெனரல் பிபின் ராவத் இறுதி நிகழ்ச்சி தில்லியில் இன்று நடைபெறுகிறது

புதுதில்லி, டிச.9- நீலகிரி மாவட்டம் குன்னூரில் புத னன்று நேர்ந்த ஹெலிகாப்டர் விபத் தில் முப்படைகளின் தலைமைத் தள பதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதி காரிகள் என 13 பேர் பலியாகினர். இவர்களது இறுதி நிகழ்ச்சி வெள்ளி யன்று நடைபெறுகிறது. இவர்களது மறைவிற்கு மக்கள வை, மாநிலங்களவையில் உறுப்பின ர்கள்  மௌனஅஞ்சலி செலுத்தினர். உயிரிழந்தவர்கள் விவரம் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த வர்கள் விவரத்தை இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்து ள்ளது.

ஜெனரல் பிபின் ராவத், மதுலிகா  ராவத், பிபின் ராவத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிக் லக்பிந்தர் சிங்,  பணியாளர்துறை அதிகாரி லெப்டி னன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், விங் கமாண்டர் பிருத்வி சிங் சவுகான், ஸ்க்வாட்ரான் லீடர் குல்தீப் சிங், ஜூனியர் வாரண்ட் அதிகாரி ராணா  பிரதாப் தாஸ், ஜூனியர் வாரண்ட் அதி காரி அரக்கல் பிரதீப், ஹவில்தார் சத்பால் ராய், நாயக் குர்சேவக் சிங்,  நாயக் ஜிதேந்திர குமார், லான்ஸ் நாயக் விவேக் குமார், லான்ஸ் நாயக் பி சாய் தேஜா ஆகியோர் உயிரிழந்த னர்.

நாடாளுமன்றம் அஞ்சலி 

மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழ னன்று தாக்கல் செய்த அறிக்கை யில், “வெலிங்டனில் உள்ள பாது காப்புப் பணியாளர் கல்லூரிக்கு ஜெனரல் ராவத் திட்டமிட்டிருந்தார்.  பிபின் ராவத் பயணம் செய்த ஹெலி காப்டர் புதன் காலை 11.48 மணிக்கு  புறப்பட்டு  வெலிங்டனில் 12.15 மணிக்கு தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் பகல் 12.18 மணிக்கு சூலூர் விமானநிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.  அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து  பார்த்தபோது ஹெலிகாப்டர் எரிந்து  கொண்டிருந்தது. உள்ளூர் அதிகாரி கள் தங்களால் முடிந்தவரை மீட்டு வெலிங்டன் அருகிலுள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்” என் றார். உயிரிழந்தவர்களுக்கு நாடாளு மன்ற உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் மௌனஅஞ்சலி செலுத்தினர். மக்க ளவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஜென ரல் ராவத்தின் சேவை நிகரற்றது என  புகழஞ்சலி செலுத்திப் பேசினார்.

ஆபத்தான நிலையில் வருண் சிங்

ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து  தப்பிய ஒரே நபர் குரூப் கேப்டன் வருண் சிங். இவர் பலத்த தீக்காயங் களுடன் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகிறார். இவர் கடந்த ஆண்டு தேஜஸ் போர் விமானம் 15  ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது  தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட போது, விமானத்தை சாதுர்யமாகக் கையாண்டு  விமானத்தை தரை யிறக்கியவர் ஆவார். இவரது துணிச்ச லைப் பாராட்டி ஆகஸ்ட் மாதம் அவ ருக்கு சௌர்ய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.  வருண் சிங்கை கோயம்புத்தூரில் மருத்துவமனைக்கு மாற்ற விமானப் படை முடிவு செய்ததால் அவருக்கு சிகிச்சையளிக்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

விசாரணை அதிகாரி நியமனம்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து முப்படை விசாரணைக்கு இந்திய விமானப்படை  உத்தரவிட்டுள்ளது. ஏர் மார்ஷல் மானவேந்திர சிங்  தலைமையிலான குழு விசாரணை நடத்த உள்ளதாக  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவை யில் வியாழனன்று தெரிவித்தார். இதையடுத்து விசாரணை புதன்கிழமை தொடங்கியது.

இன்று இறுதி நிகழ்ச்சி

ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடை பெறுகிறது. கோயம்புத்தூர் சூலூர்  விமானநிலையத்திலிருந்து புது தில்லி கொண்டு செல்லப்படும் அவ ரது உடல் தவுலா குவானில் உள்ள  ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு, ஜெனரல் ராவத்  மற்றும் மனைவி மதுலிகா உள்ளிட் டோரின் உடல்கள் புதுதில்லியில் உள்ள குமாரசாமி காமராஜ் மார்க்கில் உள்ள அவர்களின் அதி காரப்பூர்வ இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும். பிற்பகல் 2 மணியள வில் அவர்களது உடல்கள், முப்படை களின் அணிவகுப்புடன் தௌலா குவானில் உள்ள ப்ரார் என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு  தகனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு. மாலை நான்கு மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

 

;