அடிஸ் அபாபா, செப்.3- எத்தியோப்பியாவின் வடபகுதி யில் நடைபெற்று வரும் சண்டையால் ஏராளமான மக்கள் இடம் பெயர்ந்து பல பகுதிகளுக்கும் சென்று கொண்டி ருக்கிறார்கள். அந்தப் பகுதிகளில் நிவாரணப் பணிகளை ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு வழிகளில் மேற்கொண்டு வருகிறது. ஐ.நா. அலுவலர்களில் ஒருவரான துஜாரிக் கூறுகையில், “மனிதாபிமான உதவிகள் அவசர, அவசியமாக எத்தியோப்பியாவின் வட க்குப் பகுதியில் தேவைப்படுகிறது. ஆனால் அதைக் கொண்டு செல்வ தற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. வடக்குப்பகுதியில் நடக்கும் சண்டையால் மக்கள் தங்கள் வீடுக ளை விட்டு வெளியேறி வருகிறார் கள்” என்று தெரிவித்தார். மேலும் கூறிய அவர், “எத்தியோப் பியாவின் கெக்கெல்லே பகுதிக்குள் சாலை வழியான பாதையில் செல்வது சாத்தியமில்லாததால் ஐ.நா. சபை யின் விமான சேவை மூலமாக உதவி கள் செய்யப்பட்டுள்ளன.
அஹர் பகுதியில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியி ருக்கிறோம். கடந்த ஒரு வாரத்தில் 8 ஆயிரம் பேருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் உதவிகளை மேற்கொண்டி ருக்கிறோம்” என்றார். அஹர் மற்றும் அம்ஹாரா ஆகிய வடகோடிப் பகுதி கள்தான் எத்தியோப்பியாவில் நடக்கும் சண்டையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவையாகும். பல்வேறு தடைகளைத் தாண்டி ஐ.நா. அமைப்புகளும், அதற்கு உதவி யாக நிற்கும் பல்வேறு தொண்டு நிறு வனங்களும் தங்கள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரு கின்றன. டைக்ரே பகுதியில் உள்ள விடுதலை முன்னணிக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மீண்டும் கடு மையான சண்டை நடந்து வருகிறது. பல்வேறு தயாரிப்புக்குப் பிறகு அரசுப்படைகள் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.