உச்சநீதிமன்றத்திற்கு எடிட்டர்ஸ் கில்டு கடிதம்
புதுதில்லி, ஜன.31- இஸ்ரேல் நாட்டின் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருளை இந்திய அரசே தான் விலைக்கு வாங்கியது என்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ ஏடு வெளியிட்டுள்ள ஆதாரங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஓய்வுபெற்ற உச்ச நீதி மன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரனுக்கு ‘இந் திய பத்திரிகை ஆசிரியர்கள் கூட்ட மைப்பு’ (Editors Guild of India) கடிதம் எழுதியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் ‘என்எஸ்ஒ’ நிறு வனத் தயாரிப்பான ‘பெகாசஸ்’ வேவு மென்பொருள் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட் டாளர்களின் தொலைபேசி ஒட்டுக் கேட் கப்பட்ட விவகாரம் கடந்த ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடாளு மன்றக் கூட்டத் தொடரே முடங்கும் அள விற்கு எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தில் போராட்டம் நடத்தின. எனினும் ஒன்றிய பாஜக அரசு உரிய பதிலளிக்காத நிலை யில், இந்து நாளிதழ்’ முதன்மை ஆசிரியர் என்.ராம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்ட பலர் உச்சநீதிமன் றத்தில் வழக்கு தொடுத்தனர்.
உச்சநீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதி மன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமை யில் மூன்று பேர் கொண்ட குழுவை கடந்த ஆண்டு அமைத்தது. இதனிடையே, “கடந்த 2017-ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் மேற்கொண்ட 2 பில்லியன் டாலர்கள் (ரூ. 15,000 கோடி) மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக- பெகாசஸ் மென் பொருளை இந்திய அரசே நேரடியாக விலைக்கு வாங்கியதாக அமெரிக்கா வின் ‘தி நியூ யார்க் டைம்ஸ்’ நாளிதழ் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆதாரப்பூர் வமாக உண்மைகளைப் போட்டு உடைத் தது. இதையடுத்து ‘பெகாசஸ்’ விவகாரம் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், “பெகாசஸ் மென் பொருள் வாங்கப்பட்டதா? அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள் பட நாட்டு மக்களை உளவுப் பார்க்க அந்த மென்பொருள் பயன்படுத்தப்பட் டதா?
என்ற கேள்விகளுக்கு ஒன்றிய அரசு தொபர்ந்து தெளிவற்ற பதிலையே அளித்து வருகிறது. ஒன்றிய அரசின் இந்த நிலைப்பாடு ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளி தழில் வெளியான தகவலுக்கு நேர் எதி ராக உள்ளது. எனவே, பெகாசஸ் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின்போது ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் வெளி யான தகவலையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்தத் தகவல் குறித்து ஒன் றிய அரசு, இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (CAG), மத்திய அமைச்சகங்களின் செயலர்களுக்குத் தொபர்பிருக்கக் கூடும் என்பதால் அவர் களிடம் விளக்கம் கோர வேண்டும்.
ஒன்றிய அரசின் நிதி, பாதுகாப்பு, உள்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்பட வேறு எந்த அமைச்சகத்தையாவது விசாரணைக் கான சாட்சியமாகக் கருதினால், அந்த அமைச்சகங்களிடமும் பிரமாணப் பத்தி ரங்கள் மூலம் பதில் கோர வேண்டும். பெகாசஸ் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்கும் குழுவின் நடவடிக்கைகள் பொதுமக்கள் அறியும் விதத்தில் இருக்க வேண்டும். அதன் மூலம் விசாரணைக் கான சாட்சியங்கள், அவர்களின் பதில் களில் முழுமையான வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரனுக்கு, இந்திய பத்திரிகை யாளர்கள் கூட்டமைப்பான ‘எடிட்டர்ஸ் கில்ட்’ ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதி யுள்ளது.