states

img

பாஜக ஆளும் மாநிலங்களில் உணவுப் பணவீக்கம் கடும் அதிகரிப்பு!

புதுதில்லி, செப். 23 - பாஜக ஆளும் மாநிலங்களில் உணவுப் பணவீக்கம் தேசிய சராசரியை விடவும் அதிகமாக இருப்பது புள்ளவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக, ‘குஜராத் மாடல்’ என்று பாஜக-வினர் கதையடிக்கும் குஜராத் மாநிலத்தில் உணவுப் பணவீக்கம் மிகவும் மோசமான வகையில் இரட்டை இலக்கத்தில் பதிவாகியுள்ளது. நுகர்வோர் விலைக் குறியீட்டால் (CPI) அளவிடப்படும் சில்லரை விலை பணவீக்கம் மூன்று மாதங்களாக குறைந்து வந்த நிலையில்,  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 7.00 சதவிகிதமாக உயர்ந்தது. மேலும், தொடர்ந்து 8-ஆவது மாத மாக, ரிசர்வ் வங்கி (RBI) நிர்ணயித்த 6 சத விகிதம் என்ற பணவீக்க உச்ச வரம்பைத் தாண்டி பதிவானது.

இந்தப் பணவீக்கத்திற்கு, உணவுப் பொருட் களின் விலைவாசி அடிப்படையிலான பண வீக்கமே முக்கிய காரணம் என்பதை ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தின. ஜூலை மாதத்தில், உணவுப் பொருட்களின் பண வீக்கம் 6.69 சதவிகிதமாக இருந்த நிலையில், அது ஆகஸ்டில் 7.62 சதவிகிதமாக உயர்ந்தது. குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் காய்கறி களின் விலை 13.23 சதவிகிதம், மசாலாப் பொருட்கள் 14.90 சதவிகிதம், தானியங்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களின் விலைகள் 9.57 சதவிகிதம், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலைகள் 6.39 சதவிகிதம், பழங்களின் விலை 7.39 சதவிகிதம், உணவு மற்றும் பானங்கள் தவிர, எரிபொருள் மற்றும் விளக்குகள் விலை 10.78 சதவிகிதமும், ஆடை மற்றும் காலணிகள் விலை 9.91 சதவிகிதம், வீட்டுவசதி பிரிவு விலைவாசி 4.06 சதவிகிதம் என உயர்வைக் கண்டன.

இந்நிலையில், மற்றுமொரு புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. அதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் சில்லரை உணவுப்பொருள் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில், அது தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில், ஆகஸ்ட் மாத உணவுப் பணவீக்கமானது 5 சதவிகிதம்  அல்லது அதற்கும் குறைவாகவே இருந்துள் ளது. தெலுங்கானாவிலும் கூட தேசிய சராசரியை  விட குறைவாகவே (6 சதவிகிதம்) உணவுப் பணவீக்கம் பதிவாகியுள்ளது. ஆனால், இதற்கு மாறாக, பாஜக நீண்டகால மாக ஆட்சி நடத்தும் குஜராத்தில் 11.5 சதவிகிதம் என்ற அளவிற்கு உணவுப் பணவீக்கம் பதிவாகி யுள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் ராஜஸ்தான் (10.4 சதவிகிதம்), மேற்குவங்கம் (10  சதவிகிதம்), உத்தரப் பிரதேசம் (9.2 சதவிகிதம்), மகாராஷ்டிரா மற்றும் உத்தரகண்ட் (8.5 சதவிகிதம்) என்ற அளவில் தேசிய சராசரியை விடவும் அதிகமாக இருந்துள்ளன. உள்நாட்டில் தானியங்களின் விலைவாசி உயர்வு காரணமாக, மே மாதத்தின் நடுப்பகுதி யில் கோதுமை ஏற்றுமதி, கோதுமை மாவு ஏற்று மதிக்கு தடை விதித்த ஒன்றிய அரசு, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி உடைந்த அரிசியின் (குருணை) ஏற்றுமதிக்கும் தடை விதித்தது. அத்துடன் பாசுமதி அல்லாத பல்வேறு தர அரிசி களுக்கு 20 சதவிகித ஏற்றுமதி வரி விதித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

;