states

img

தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்தது எப்படி?

புதுதில்லி, நவ. 23 - தேர்தல் ஆணையர் நியமன நடை முறைகள் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்துக் கொண்டி ருக்கும்போது, அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது எப்படி? என்றும், அதுதொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நரேந்திர மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தேர்தல் ஆணையர்கள் நிய மனத்திற்கு ‘கொலீஜியம்’ போன்ற சுதந்திரமான அமைப்பு வேண்டும் என்று  தொடரப்பட்டிருந்த வழக்கை, கே.எம். ஜோசப் தலைமையில் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய்  மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகிய 5 நீதிபதி கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. செவ்வாயன்று நடைபெற்ற விசாரணையின்போது, ‘18 ஆண்டுகளில் 14 தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மாற்றப்பட்டது’ குறித்து உச்சநீதிமன்றம் தனது கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தது. (விவரம் : 3ம் பக்கம்) இந்நிலையில், இந்த வழக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையன்று விசாரிக்கப்பட்டது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த  வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜ ராகி வாதாடினார். அவர், தேர்தல் ஆணை யர் நியமன நடைமுறைகள் குறித்த  வழக்கு விசாரணையில் இருக்கும் போதே, கடந்த நவம்பர் 21 அன்று அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டுள்ள விவகாரத்தைக் கிளப்பினார்.

“அருண் கோயலின் நியமனமானது, அவருக்கு ஏற்கெனவே பணியாற்றிய துறையிலிருந்து விருப்ப ஓய்வு அளித்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப் பட்டவர்கள் கூட ஓய்வுபெற்றவர்கள். ஆனால் அருண் கோயல் (ஒன்றிய அர சின் கனரக தொழில்துறை) செயலாள ராக பதவி வகித்துக் கொண்டிருந்தவர். வியாழக்கிழமை (நவம்பர் 17) வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, வெள்ளிக் கிழமை (நவம்பர் 18) அவருக்கு விருப்ப  ஓய்வு அளிக்கப்படுகிறது. சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை அதே அருண் கோயலுக்கு தேர்தல் ஆணையராக பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. அவரும் திங்கள்கிழமை (நவம்பர் 21) பதவியேற்றுக் கொள்கிறார். இது என்ன நடைமுறை?” என்று பூஷண் கேள்வி எழுப்பினார். மே மாதம் முதல் அந்த பதவி காலி யாக இருக்கும் நிலையில், நியமனத் திற்கு எதிராக இடைக்கால உத்தரவு கோரி, தான் மனுத்தாக்கல் செய்துள்ள  சூழலில் அருண் கோயல் நியமிக்கப் பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், “பொதுவாக விருப்ப ஓய்வு  கோரும் பணியாளருக்கு 3 மாத அவ காசம் அளிக்க வேண்டும். அவ்வாறு நோட்டீஸ் ஏதும் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் இருக்கிறது” என்று கூறிய பிரசாந்த் பூஷண், “எனவே, அது தொடர்பான கோப்புகளை நீதிமன்றம் சரி பார்க்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார். இதற்கு ஒன்றிய அரசின் அட்டர்னி ஜென ரல் ஆர். வெங்கடரமணி எதிர்ப்பு தெரிவித்  தார். பூஷணால் எழுப்பப்பட்ட அருண்  கோயல் நியமனத்திற்குப் பின்னால் “எந்த வொரு திட்டமிடுதலும் இல்லை” என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜோசப், “இந்த வழக்கை கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 17) விசாரித்தோம். அந்த நிலை யில் இடைக்கால மனு இருப்பதாக பூஷண்  கூறினார். அதன்பின் அடுத்தகட்ட விசா ரணை செவ்வாயன்று (நவம்பர் 22) நடை பெறுகிறது. எனவே, குறிப்பிட்ட அந்த அதி காரியின் நியமனம் தொடர்பான கோப்பு களை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்கி றோம். நீங்கள் கூறுவது போல் எல்லாம் சரியாக இருந்தால், துக்கமில்லை; பயப்பட வும் ஒன்றுமில்லை.

தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் பின்பற்றப்படும் வழிமுறை என்ன என்பதையே நீதிமன்றம் அறிய விரும்புகிறது. ஏனென்றால், நாங்கள் விசா ரணையைத் துவங்கிவிட்ட பிறகு, தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் இந்த நீதி மன்றத்தால் பரிசீலிக்கப்படும்போது, நடந்த  ஒரு நியமனம் என்பதால் அதனை நாங்கள்  சரிபார்க்க விரும்புகிறோம். தற்போது நிய மனம் தொடர்பாக நாங்கள் எந்த தீர்ப்பும் அளிக்கவில்லை. ஆனால் நியமனத்தை நாங்கள் தெரிந்து கொள்ள மட்டுமே விரும்பு கிறோம். நீங்கள் கூறுவது போல் எல்லாம் சுமூகமாக உள்ளது என்றால் நீங்கள் பயப்பட ஒன்றுமில்லை. உங்களுக்கு நியாயமான ஆட்சேபணை இல்லாவிட்டால், கோப்பு களை சமர்ப்பிக்க மட்டுமே நாங்கள் உங்க ளிடம் கேட்கிறோம். உரிய நடைமுறை பின்  பற்றப்பட்டு இருந்தால் அது உங்களுக்கும் சாதகமாக இருக்கும்” என்று கூறினார். மேலும் வியாழக்கிழமைக்குள் கோப்புக் களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

 

;