உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்
சுதர்சன் ரெட்டியை துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தியது வரவேற்கத்தக்கது. நீதித்துறையில் தீர்ப்புகளை வழங்குவதில் சுதர்சன் ரெட்டி சிறந்த நீதிபதியாக இருந்தவர். சுதர்சன் ரெட்டியுடன் ஒப்பிடும்போது தேஜகூ வேட்பாளர் ஒன்றும் இல்லாதவர் தான்.
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி
தமிழர் என்பதால் மட்டும் ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது. தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதை ஒரு பக்கத்திற்காவது பாஜகவினரால் சொல்ல முடியுமா?
சமாஜ்வாதி எம்.பி., டிம்பிள் யாதவ்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் முறைகேடு தொடர்பாக கேள்வி கேட்டார். அதற்கு பதில் சொல்ல வேண்டியது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமை ஆகும். ஆனால் மன்னிப்பு கேட்கச் சொல்வது சரியானது அல்ல. அதனால் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை.
ஆம் ஆத்மி கட்சி
“இந்தியா” கூட்டணியின் சார்பில் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டிக்கு நாங்கள் முழு ஆதரவை அளிப்போம். “இந்தியா” கூட்டணியில் இருந்து விலகினாலும் அக்கூட்டணிக்கான ஆதரவு தொடரும்.