வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நாடு முழுவதும் அக்டோபரில் துவக்கம்
நாடு முழுவதும் அக்டோபர் மாதம் எந்த தினத்திலும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் துவங்க தயாராக இருக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. பீகாரைத் தொடர்ந்து நாடு முழுவ தும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளத் தயாராவது குறித்து இந்திய தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஸ் குமார் தலைமையில், அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை அக்டோபர் மாதத்துக்குள் துவங்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் அசாமில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் 2025 இறுதிக்குள் இந்த திருத்த நடவடிக்கை யை தேர்தல் ஆணையம் வேகமாக முடிக்க திட்டமிடுகிறது என கூறப்படுகிறது. பீகாரில் நடத்தப்பட்ட திருத்தத்தில் சுமார் 65 லட்சம் பேரின் பெயர்களை தேர் தல் ஆணையம் நீக்கியது. உயிருடன் இரு ப்பவர்கள் பலரை இறந்து விட்டதாகக் கூறி நீக்கியுள்ளது. சிறுபான்மையினர், பெண்களை குறிவைத்து நீக்கியுள்ளது. இது பாஜகவை வெற்றி பெற வைக்க தேர்தல் ஆணையத்தை திட்டமிட்டு பயன் படுத்தும் நடவடிக்கை என குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாடுமுழுவதும் செய்யப் படும் திருத்தம் பல விளைவுகளை உருவாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.