சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்
பிஜேடி, சிரோன்மணி அகாலிதளம் மற்றும் பிஆர்எஸ் ஆகியவை தொடர்ந்து பாஜக அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தக் கட்சிகள் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை. ஆனால் மறைமுகமாக ஒதுங்கி ஆதரவு அளித்துள்ளனர்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்றன. “இந்தியா” கூட்டணியின் அனைத்து எம்.பி.,க்களும் வாக்களித்துள்ளனர். இது முன்னெப்போதும் இல்லாத வகையில் 100% வாக்குப்பதிவு. இதுவே எதிர்க்கட்சிக்கு வெற்றி தான்.
மூத்த பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர்
பாலஸ்தீன மக்கள் படுகொலை குற்றச்சாட்டால் இஸ்ரேலிய அமைச்சர் ஸ்மோட்ரிச்சுக்கு பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நார்வே மற்றும் கனடா நாடுகள் தடை உத்தரவை பிறப்பித்துள்ளன. ஆனால் இந்திய அமைச்சரோ (நிர்மலா) முதலீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் ராணா அய்யூப்
இலங்கை, வங்கதேசத்தை தொடர்ந்து இப்போது நேபாளத்திலும் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி அண்டை நாடுகளில் தொடர்கிறது. நமது அண்டை நாடுகளிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வோம்.