states

“நாளை இந்தியா தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு!”

புதுதில்லி, ஜூலை 2- ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (Shanghai Cooperation Organisation - SOC)  23-ஆவது மாநாட்டை, ஜூலை 4-ஆம் தேதி காணொலி வாயிலாக, இந்தியா தலைமை யேற்று நடத்துகிறது. இந்நிலையில், இந்த மாநாட்டில், மக்கள் சீனக் குடியரசின் ஜனாதிபதி ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோா் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடு களின் ஆதிக்கத்திற்கு எதிராக, 2001-ஆம்  ஆண்டு ரஷ்யா, சீனா மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள முன்னாள் சோவியத் நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகும். பின்னர், இந்த அமைப்பு இந்தியா மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி தற்போது, ஷாங்காய் ஒத்துழைப்பு  கூட்டமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்புக்கு நடப்பாண்டில் இந்தியா தலைமை வகித்து வருகிறது. எஸ்சிஓ கூட்டமைப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு இணைந்த இந்தியா, முதல் முறை யாக அதன் தலைமைப் பொறுப்பை பெற்றது. பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம், தொடர்பு, ஒற்றுமை, இறையாண்மை - பிராந்திய ஒருமைப் பாட்டுக்கு மரியாதை, சுற்றுச்சூழல் ஆகிய வற்றுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வந்தது.

இந்நிலையில்தான், ஜூலை 4 அன்று காணொலி வாயிலாக இந்தியா தலைமை யேற்று நடத்தவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில், சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் கலந்து கொள்ளவுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை யன்று உறுதி செய்துள்ளது. அதேபோல, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பும், மாநாட்டில் கலந்து கொள்வார் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் புதிய உறுப்பு நாடாக ஈரான் இணைத்துக் கொள்ள ப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான ஒப்புதல் மாநாட்டின்போது வழங்கப் படும் என்றும், இதன் மூலமாக எஸ்சிஓ கூட்ட மைப்பு நாடுகளின் எண்ணிக்கை 9-ஆக அதி கரிக்கும் என்றும் அந்த தகவல்கள் தெரி விக்கின்றன. அணு ஆயுதப் பயன்பாடு தொடர்பான விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையேயான மோதல்போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், எஸ்சிஓ கூட்டமைப்பில் ஈரான் இணைத்துக் கொள்ளப்படுவது, அமெரிக்காவுக்கு, வலுவான செய்தியை சொல்வதாக அமையும். ஜூலை மாநாட்டிற்குப் பிறகு, ஷாங்காய் ஒத்து ழைப்பு கூட்டமைப்பிற்கு கஜகஸ்தான் தலை மைப் பொறுப்பை ஏற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

;