ஷில்லாங்,அக்.11- பாலியல் வன்கொடுமை குறித்து இமாச்சலப் பிரதேச காவல்துறையினர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் பற்றி 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் என கடந்த 3 ஆண்டுகளில் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகளை வைத்து இமாச்சலப் பிரதேச போலீசார் பகுப்பாய்வு மேற்கொண்ட னர். அந்த ஆய்வின் முடிவில் பாலியல் வன்கொடு மையில் ஈடுபடும் 52 சதவீதம் பேர் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நன்கு தெரிந்தவர்களே என்று தெரி விக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில், கடந்த 3 ஆண்டு களில் இமாச்சல பிரதேசத்தில் பாலியல் குற்ற வாளிகளுக்கு எதிராக 895 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் 52.4 சதவீத பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நன்கு தெரிந்தவர்களாலேயே நிகழ்ந்துள்ளது. நட்பின் வழியே அறிமுகமானவர்களால் 24.4 சதவீதமும், திருமணம் என்ற பொய்யான வாக்குறுதிகளின் பேரில் 16.9 சதவீதமும், லிவிங் டு கெதர் எனப்படும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழும் போது 4.1 சதவீதமும் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களால் 2 சதவீதமும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. மேலே குறிப்பிடப்பட்ட பல வழக்குகள், சம்ப வங்கள் நடக்கவிடாமல் முன்பே தவிர்க்கக் கூடிய வகையை சேர்ந்தவை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆழ்ந்த வருத்தத்திற்கு உரியது என்று அம்மாநில போலீஸ் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.