states

img

ஒன்றிய ஆளும் பாஜக அரசுக்கு கெட்டகாலம் துவங்கி விட்டது!

புதுதில்லி, டிச.21- பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமி தாப் பச்சனின் மனைவியும், மூத்த திரைக்கலைஞருமான ஜெயா பச்சன், சமாஜ்வாதி கட்சி யின் மாநிலங்களவை உறுப்பின ராக இருக்கிறார்.  இவர், திங்களன்று போதைப் பொருள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார். அப் போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் ‘சஸ்பெண்ட்’ செய்யப் பட்டது குறித்துப் பேசினார். அப் போது, “மாநிலங்களவைத் தலைவரும் முன்பு எதிர்க்கட்சி யாக இருந்தபோது அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளி யில் ஈடுபட்டவர்தான்” என்பதை பாஜகவினருக்கு அவர் நினைவு படுத்தினார்.

இதனால், ஆத்திரமடைந்த பாஜக எம்.பி.க்கள் ஜெயா பச் சனை பேசவிடாமல் கூச்சல் போட் டனர். தனிப்பட்ட முறையிலும் ஜெயா பச்சனை அவதூறு செய் தனர். இது ஜெயா பச்சனை வேத னையில் ஆழ்த்தியது. இதையடுத்து, “எனது சொந்த வாழ்க்கையை குறிப்பிட்டு அவையில் குற்றம்சாட்டுகின்ற னர். இதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்திய ஜெயா பச்சன், “பாஜக அரசுக்கு கெட்டகாலம் ஆரம்பித்து விட்டது. அது இனி மோசமான நாட்களையே சந் திக்கும். இதை நான் சாபமாகவே அளிக்கிறேன்” என்றும் ஆவே சத்துடன் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிவர்த் தனையில் ஈடுபட்டதாக ஜெயா பச்சனின் மருமகள் ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பிய அம லாக்கத்துறை, அவரிடம் திங்க ளன்று 5 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது. அதேபோல ஜெயா பச்சன்  சார்ந்த சமாஜ்வாதி கட்சித் தலை வர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.