states

img

தில்லி மாநில பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் பாடம்

தில்லி மாநில பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் பாடம்

தில்லியில் பாஜக ஆட்சி அமைந்த பின்பு கல்வித்துறையை காவி மயமாக மாற்ற தீவிர முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில், கல்வி வளாகங்களில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தில்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா தலைவர்களுடன் பங்கேற்று வருகிறார். அதே போல பாடத்திட்டத்தில் இல்லாத பகுதிகளும் கூட பாடக்குறிப்புகளாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு  வருவ தாக செய்திகள் வெளியாகி வரு கின்றன. இந்நிலையில், தில்லி அரசுப் பள்ளிக ளில் ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்த  பாடங்களை சேர்க்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. “ராஷ்ட்ர நீதி” என்ற இந்த புதிய கல்வித் திட்டத்தின் கீழ், தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய பாடங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தில்லி அரசு அதிகா ரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தில்லி பாஜக அரசின் இந்த அறிவிப்புக்கு கல்வி யாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர்.