states

img

குடிசைகளை கொளுத்திய ரியல் எஸ்டேட் மாபியாக்கள்

தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியலில் ரியல் எஸ்டேட் மாபியாக்களால் தங்களது சுயலாபத்திற்காகவும், நிலங்களை பறிப்பதற்காகவும் அப்பகுதியில் வாழும் ஏழைமக்களின் குடிசைகளை இடித்து எரித்தனர். தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெலுங்கானா மாநிலத் தலைவர்கள் எஸ்.வீரய்யா, மல்லு லட்சுமி, பைலா ஆசையா ஆகியோர் அப்பகுதி பொதுமக்களுடன் பேரணியாக சென்று கொளுத்தப்பட்ட குடிசைகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் உடனடியாக நிலப்பட்டா ஒதுக்கீடு செய்து வீடுகள் கட்டித்தர வேண்டும் என மாநில அரசுக்கு சிபிஎம் குழு கோரிக்கை விடுத்துள்ளது.