“ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் செயல்பாடுகள் பொதுமக்களுக்கு தவறான செய்தியை அனுப்பியது”
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இல்லாதது, பிரதமர் மோடியுடன் “சாய் பே சர்ச்சா”வில் காங்கிரஸ் பொதுச் செய லாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றது நாட்டு மக்களுக்கு தவறான செய்தியை தருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி., ஜான் பிரிட்டாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செவ்வாயன்று நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,”நாங்கள் எதிர்க் கட்சி தலைவரான ராகுல் காந்தி அவை நடவடிக்கையில் ஆளும் கட்சிக்கு எதி ராக விவாதத்தில் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்த்தோம். அது எங்களு டைய எதிர்பார்ப்பும், விருப்பமுமாகவும் இருந்தது. ஆனால் இது நடக்கவில்லை. அவர் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். ராகுல் காந்தி அவையில் இருந்திருந் தால், அனைத்தும் வேறு மாதிரி இருந்தி ருந்திருக்கும். மேலும், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் நடைபெறும் தேதி ஏறக்குறைய கடந்த மூன்று முதல் நான்கு தசாப்தங்களாக ஒரே மாதிரியாக இருந்து வருகிறது. ஏறக்குறைய டிசம்பர் 22ஆம் தேதி வாக்கில் முடிவடையும் என்று அனைவருக்கும் தெரியும். இந்த நேரத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலை வர் மற்ற அட்டவணையை திட்டமிட வேண்டாம் மற்றும் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று நாங்கள் (இந்தியா கூட்டணி கட்சிகள்) சொல்ல வேண்டு மா? அல்லது காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு சொல்ல வேண்டுமா?” என கேள்வி எழுப்பினார். பிரியங்கா காந்தி மேலும்,”குளிர்கால கூட்டத் தொடர் முடிந்த பிறகு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நடத்திய தேநீர் கூட்டத்தில் (சாய் பே சர்ச்சா) காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற் றார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை (MGNREGA) பாஜக “புல்டோசர்” செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு தவறான செய்தியை அனுப்பியது. இது எங்களைப் போன்றவர்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. பிரியங்கா காந்தியும் மற்றவர்களும் பிரதமருடன் தேநீர் விருந்தில் அமர்ந்திருப்பதைப் பார்ப்பது எங்களுக்கு நல்ல காட்சியாக இல்லை” என அவர் கூறினார்.
