புதுதில்லி, ஜூலை, 12- பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாள ரை “வாயை மூடு” என்று கூறி மைக்கை உடைத்தார் பாஜக எம்.பி., பிரிஜ்பூஷன். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பியும், மூன்றாவது முறை யாக இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவராக இருப்பவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் ஒரு சிறுமி உட்பட மல்யுத்த வீராங்கனைகள் பலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடு பட்டதாக சக வீராங்கனைகள் குற்றம்சாட்டினர். கடந்த ஜனவரி மாதமே இந்தக் குற்றச்சாட்டு கூறிய பொழுதிலும், ஒன்றிய விளை யாட்டுத்துறை அமைச்சகம் கண்டு கொள்ளததால் நாட்டின்முன்னணி வீரர், வீராங்கனைகளான வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, ஷாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் போராடினர். மேரிகோம் தலைமையில் விசாரணை குழு அமைக்க போராட்டம் தற்காலிக மாக வாபஸ் பெறப்பட்டது. ஆனாலும், பிரிஜ் பூஷன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மீண்டும் ஏப்ரலில் போராட்டத்தில் குதித்தனர் மல்யுத்த வீரர்- வீராங்கனைகள். தொடர்ச்சியாக இரண்டு மாதங் களுக்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்தில் கலவரங்கள், கைது சம்பவங்கள், கைகலப்பு எனப் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின. இறுதியாக பிரிஜ் பூஷன் மீது வீசாரணை நடத்தப்படும் என ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதியளித்தார்.
இதையடுத்து நீண்ட விசாரணைக்குப் பிறகு பிரிஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது தில்லி போலீஸ். இத னால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு இனி போராட்டம் நீதிமன்றத்தில் தொட ரும் என அனைவரும் கூட்டாக அறி வித்தனர். “வாயை மூடு” இந்நிலையில், விமானநிலை யத்தில் இருந்து வெளியில் வந்த பிரிஜ் பூஷனிடம் டைம்ஸ் நவ் (Times Now) பெண் பத்திரிகையாளர் தேஜாஶ ்ரீ புராந்தரே, பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாகக் கேள்விகளை எழுப்பி னார். அதற்கு அவர், “நான் எதையும் உங்களிடம் கூற வேண்டிய அவசிய மில்லை. என்னால் உங்கள் கேள்வி களுக்கு எந்தக் கருத்தும்கூற முடி யாது. நீதிமன்றத்தில் பேசிக்கொள் கிறேன்” எனக் கூறினார். “உங்கள் மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளது, இதனால் நீங்கள் பதவி விலகுவீர்களா?” அடுத்த கேள்வியை தேஜாஶ்ரீ கேட்க, “நான் ஏன் என் பதவி யை ராஜினாமா செய்ய வேண்டும்? என்னை பதவி விலகச் சொல்ல நீ யார்? வாயை மூடு” எனக் காட்டமாகப் பதில் அளித்து அந்த இடத்தை விட்டு நழுவினார். பிரிஜ் பூஷனை தொடர்ந்து சென்ற தேஜாஶ்ரீ, அவர் காரில் அமரும் போது மைக்கை நீட்டினார். ஆனால் பிரிஜ் பூஷன் வேண்டுமென்றே கார் கதவை ஆக்ரோஷத்துடன் மூட, மைக் உடைந்துபோனது. பிரிஜ் பூஷ னின் இந்த கீழ்த்தரமான செயலுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
ஸ்மிருதி இரானி பதில் கூறுவாரா? : காங்கிரஸ் கேள்வி
“மல்யுத்த வீராங்கனைகளை துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப் பட்டுள்ள பாஜக எம்பி, கேமிரா முன்னிலையில் பெண் நிருபர் ஒருவரை மிரட்டி, அவரது மைக்கை உடைக்கிறார். இவ்வாறு பேசுவது யார்? இது யாருடைய பண்பு என்பதை குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுவாரா?” என இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். “பிரதமர் மோடி பாஜகவில் இருந்து பிரிஜ் பூஷன் சிங்கை எப்போது விலக்கு வார், அவர் எப்போது கைது செய்யப்படுவார்” என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லி மகளிர் ஆணைய தலைவர் கண்டனம்
“மீண்டும் சொல்கிறேன். பிரிஜ் பூஷன் சிங் ஒரு குண்டர். கேமராவில் ஒரு பெண் நிருபரிடம் இப்படி நடந்துகொள்ள அவருக்கு தைரியம் இருக்கும்போது, அவர் கேமராவிற்கு வெளியே பெண்களிடம் எப்படி நடந்துகொள்வார் என்று கற்பனை செய்து பாருங்கள்! அவர் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. நாடாளு மன்றம் இல்லை” என தில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.