பஞ்சாப் மாநில பாஜக தலைவர் காங்கிரஸில் இணைந்தார்
பஞ்சாப் மாநில பாஜகவின் மூத்த தலைவரும், பாட்டியாலா முன் னாள் மேயருமான சஞ்சீவ் சர்மா பிட்டு ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸில் இணைந்தார். தில்லியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் முன் னிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பஞ் சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ஆட்சியின் போது பாட்டியாலா மேய ராக சஞ்சீவ் சர்மா பதவி வகித்தார். தொடர்ந்து சஞ்சீவ் சர்மா 2022 பஞ்சாப் தேர்தலில் பாட்டியாலா கிராமப்புற தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் பல்பீர் சிங்கிடம் அவர் தோல்வியடைந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.