states

மோடி ஆட்சியில் கொழிக்கும் பணக்காரர்கள்! சிங்கப்பூர், யுஏஇ, சவூதி நாடுகளின் ஜிடிபி-யை விட அதிகம்

புதுதில்லி, செப். 22 - இந்தியாவில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 103 ஆக அதிகரித்துள் ளது. ஒரே ஆண்டில் புதிதாக 96 பேர் ஆயிரம் கோடி ரூபாய் சொத்துப் பட்டியலில் இணைந்துள்ளனர். பொது மற்றும் வெளிப்படுத்தப் பட்ட தகவல்களின் அடிப்படையில், ஆகஸ்ட் 30 வரையிலான இந்திய பணக்காரர்கள் குறித்த புள்ளி விவரங்களை, ‘ஐஐஎப்எல் வெல்த் ஹுரூண் இந்தியா’ (IIFL Wealth Hurun India Rich List 2022) நிறு வனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் 1,103 தனி நபர்கள் ரூ. 1,000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர், இது முந்தைய ஆண்டை விட 96 அதிகம். 1,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 65 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் பெரும் பணக்கா ரர்கள் பட்டியலில், அதானி முதலி டத்தையும், அம்பானி இரண்டாவது இடத்திலும் இருக்கும் நிலையில், உலகிலேயே பெரிய தடுப்புமருந்து உற்பத்தி நிறுவனமான ‘சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர்’ சைரஸ் பூனாவாலா 3-வது இடத்தைப் பிடித்தி ருக்கிறார். அவரது மொத்த சொத்து  மதிப்பு ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 400 கோடி ஆகும்.

மொத்தம் 1,103 பேர் அடங்கிய இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டி யலில் 2022-ஆம் ஆண்டில் 149பேர் புதிதாக இணைந்துள்ளனர். இந்த பட்டியலில் 67 பேர் சுயமாக உரு வாகியுள்ளனர். இந்த சதவிகிதம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 54 சதவிகித மாக இருந்தது. மேலும், இந்த ஆண்டு 79 சதவிகிதம் புதிய முகங்கள் சுய மாக உருவாகியுள்ளனர். இந்த பட்டியலில் தலைநகர் தில்லியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 185 பேர் இடம்பிடித்துள்ளனர். தில்லி பெரும் பணக்காரர்களில், ரூ. 1 லட்சத்து 86 ஆயிரம் கோடியுடன் எச்.சி.எல். (HCL) நிறுவனர் ஷிவ் நாடார் முதலிடத்தைப் பிடித்துள் ளார். தலைநகர பெரும் பணக்காரர் களில் 12 பேர் பெண்கள். ஹுருண் பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்களின் மொத்த சொத்து முதன்முறையாக ரூ. 100 லட்சம் கோடியைத் தாண்டி யுள்ளது. இது சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவூதி அரே பியாவின் மொத்த உள்நாட்டு உற் பத்தியை விட அதிகமாகும்.

;