ஹிஜாப் அணிவதை தடை செய்வதை வெறும் ஆடைக்கட்டுப்பாடு விதி மீறல் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அது மேலும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு செல்வதை வலியுறுத்துவதற்கு, ஆடைவிதிகள் அவர்களுக்கு எதிராக மட்டும் அமலாகிறது என்ப தால் மட்டுமல்ல, அதிகாரத்தில் உள்ள கட்சி கடைப்பிடிக்கும் மதரீதியான நடவடிக்கைகளாலும் தான். பாஜகவின் ஒவ்வொரு நடவடிக்கையும் வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கவே எடுக்கப்படுகிறது. இதற்கு அர்த்தம் முஸ்லீம்கள் தங்களுக்குள் ஒருங்கிணைக்க விரும்புகிறார்கள் என்பதல்ல, ஆனால், அரசியலமைப்பு வழிகாட்டுதல்களுக்கு எதிராக பாஜக அமல்படுத்தும் மதரீதியான நட வடிக்கைகளுக்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யவே ஆகும். ஆகையால், இளம் முஸ்லீம் பெண்கள், இந்துத்வா கொள்கையை சிறுபான்மையினர் மீதான தாக்குதல் என உணர் கின்றனர்,
ஆகவே அவர்கள் இதற்கு எதிராக ஆத ரவு தெரிவிக்க ஹிஜாப் அணிவது என்று முடிவு செய்வதால், இது நாடு தழுவிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இது, மாணவர் சமு தாயத்தில், மதவாதம் எந்தளவுக்கு ஆழமாகச் சென்றுள்ளது என்பதையே காட்டுகிறது. பாப்ரி மசூதி இடிப்பு தொடங்கி, பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்தது, குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) நிறை வேற்றியது, சமீபத்தில் ஹரித்வாரில் முஸ்லீம் களை இனப்படுகொலை செய்ய விடுக்கப்பட்ட அழைப்பு வரை பாஜவும் ஆர்எஸ்எஸ்-சும் தொட ர்ச்சியாக முஸ்லீம்கள் மீது குறிவைக்கின்றன. கோவிட் பெருந்தொற்றின் போதுகூட, பிற நாடுகளி லிருந்து வந்து தப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்ட முஸ்லீம் பிரதிநிதிகளை சிறையி லடைத்தனர்,
அவர்களை பின்னர் நீதிமன்றம் தலையிட்டுத்தான் விடுவிக்க வேண்டியிருந்தது. பாஜக/ஆர்எஸ்எஸ் அட்டவணைப்படி, முஸ்லீம்களை ஆத்திரமூட்ட வேண்டும், மதப்பிளவை ஆழப்படுத்த வேண்டும், வரலாற்றை திருத்தி எழுத வேண்டும், இந்து உணர்வை தட்டி எழுப்ப வேண்டும் போன்றவைகளே உள்ளன. இவையனைத்தும் இந்துக்களுக்கும் முஸ்லீம் களுக்கும் இடையே மத நல்லிணக்கத்தை முழு மையாக பாதித்துவிட்டது. ஆகவே, இப்படிப் பட்ட நச்சுமயமாக்கப்பட்ட சூழலில் ஆடை விதி களுக்குத்தான் தடை விதிக்க வேண்டும், எது வரையில் என்றால், பலவித நம்பிக்கையுடைய மக்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக வாழும் வரையில், இந்த தடை நீடிக்க வேண்டும். இதுவே காலம் நம்மிடம் கோருவது.