states

img

குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30 வரை அனுமதி!

புதுதில்லி, செப்.21- குருணை அரிசி (உடைந்த அரிசி) ஏற்றுமதிக்கு, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி ஒன்றிய அரசு தடை விதித்தது. இந்நிலையில் நிபந்தனைகளுடன் செப்டம்பர் 30 வரை குருணை அரிசியை ஏற்றுமதி செய்யலாம்  என்று ஒன்றிய அரசு அனுமதிவழங்கியுள்ளது. குருணை அரிசி ஏற்றுமதி 3 மடங்கு அளவிற்கு உயர்ந்ததால், இந்தியாவில் ஒரு கிலோ குருணை அரிசி 16 ரூபாயிலிருந்து திடீரென ரூ.22 ஆக அதிகரித்தது.  கோழி வளர்ப்புத் துறைக்கான உள்ளீடு செலவில் குருணை அரிசி தீவனத்தின் பங்களிப்பு சுமார் 60 சதவிகிதமாக இருக்கும் நிலை யில், உள்நாட்டில் ஏற்பட்ட இந்த விலை  உயர்வு காரணமாக, கோழித் தீவனத்து க்கோ, எத்தனால் உற்பத்திக்கோ உடைந்த அரிசி கிடைக்காமல் போனது.

இதுதவிர, காரீப் பருவத்தில் நெல்  சாகுபடி பரப்பளவு முந்தைய பருவத்தை  விட 5 முதல் 6 சதவிகிதம் குறைந்திருப்பதால், இது அரிசி சாகுபடியில் பாதிப்பை ஏற்படுத்தும். 10 முதல் 12 மில்லியன் டன்கள் அளவிற்கு அரிசி சாகுபடி குறையும் என்று கணிக்கப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி குருணை அரிசி ஏற்று மதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதுதவிர, பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கும் 20 சதவிகித வரி விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தடையுத்தரவு வெளி யாகி 10 நாட்கள் கழித்து புதிய உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், குருணை அரிசி ஏற்றுமதிக்கான முதற்கட்ட தடை உத்தரவு அமலுக்கு வரு வதற்கு முன்பு, இந்திய துறைமுகங்களில் ஏற்றுமதி செய்யப்பட்டு கப்பல்களில் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்தாலோ அல்லது நங்கூரமிட்டிருந்தாலோ, சுழற்சி  எண் ஒதுக்கப்பட்டு, குருணை  அரிசி  சரக்கு கள் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, அவற்றின் அமைப்பில் பதிவு செய்யப் பட்டிருந்தாலோ அவற்றை மட்டும் செப்டம்பர் 30 வரை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என்று வெளி நாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள் ளது.

;