states

img

பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த இளம்பெண் கொடூரப் படுகொலை பாஜக-விற்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்

ரிஷிகேஷ், செப்.24- உத்தரகண்ட்டில் இளம்பெண் அங்கிதா பாலியல் வன்கொலைக்கு எதிராக கொதித்தெ ழுந்த மக்கள், பாஜக தலைவரின் ரிசார்ட்டுக்குத் தீ வைத்தனர். பாஜக எம்எல்ஏ-வின் காரையும் அடித்து நொறுக்கினர். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் வினோத் ஆர்யா. இவர் அம்மாநில பாஜக-வின் பிரபலமான தலைவர்களில் ஒருவராவார். இவரது மகன் புல்கித் ஆர்யா. இவர் ரிஷிகே ஷில் உள்ள வனந்தரா பகுதியில் ரிசார்ட் ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு, பவுரி கர்வால் மாவட்டம் ஸ்ரீகோட் கிராமத்தைச் சேர்ந்த அங்கிதா பண்டாரி என்ற 19 வயது இளம்பெண் வரவேற்பாளராக பணி யாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த செப்டம் பர் 19-ஆம் தேதி அவர் திடீரென காணாமல் போனார். இதுதொடர்பாக அங்கிதாவின் பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்தனர். இதேபோல ரிசார்ட்டின் உரிமையாளர் புல்கித் ஆர்யாவும் காவல்துறையில் புகார் அளித்தார். ரிசார்ட் இருக்கும் பகுதி வருவாய் துறை யின் கீழ் வரும் பகுதி என்பதால், உள்ளூர் சட்டப்படி அவர்கள் புகாரை பதிவு செய்தனர். எனினும், பிரபல பாஜக தலைவரின் மகனுக்குச் சொந்தமான ரிசார்ட் விவகாரம் என்பதால், அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் எதையும் காலம் கடத்தி வந்தனர். ஆனால், இளம்பெண் அங்கிதா காணாமல் போனது, சமூக வலைத்தளங்களில் விவாத மாக மாறவே, வேறு வழியில்லாமல் காவல்துறை யினர் தலையிட்டுள்ளனர். செப்டம்பர் 21-ஆம் தேதி எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

அங்கிதா கடைசியாக செப்டம்பர் 18-ஆம் தேதி வேலைக்குச் சென்ற நிலையில்தான் வீடு திரும்பவில்லை. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது, அங்கிதாவை மூன்று ஆண்கள் அழைத்துச் செல்வதும், அதன்பிறகே அவர் வீடு திரும்பாததும் தெரியவந்தது. இதையடுத்து, பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகனும், ரிசார்டின் உரிமையாளரு மான புல்கித் ஆர்யாவை விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளார். தொடர்ந்து விசாரணையில், தங்களின் ரிசார்ட்டிற்கு வந்த விருந்தினர்களோடு, பாலி யல் தொழிலில் ஈடுபடுமாறு அங்கிதாவை வற் புறுத்தியதும், அதற்கு அங்கிதா மறுத்த நிலை யில், அவரை புல்கித் ஆர்யா, அங்கித் ஆர்யா மற்றும் பாஸ்கர் ஆகிய 3 பேர் கும்பலாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி படுகொலை செய்ததுடன், அங்கிதாவின் உடலை கால்வா யில் வீசியதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் உத்தரகண்ட்டில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி யது. இது ஆளும் பாஜக-வுக்கு நெருக்கடியாக வும் மாறியது. இதையடுத்து, புல்கித் ஆர்யா உள்ளிட்ட 3 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சனிக்கிழமையன்று அதிகாலை ரிஷிகேஷின் சில்லா கால்வாயிலிருந்து அங்கிதாவின் உடலை மீட்ட காவல்துறையினர், இளம்பெண்ணை பாலியல் வன்கொலை செய்த பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன்கள் புல்கித் ஆர்யா, அங்கித் ஆர்யா மற்றும் பாஸ்கர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

முன்னதாக, புஷ்கர் சிங் தாமி தலைமையி லான பாஜக அரசு குற்றவாளிகளை காப்பாற்ற முயல்வதாக குற்றச்சாட்டுக்கள் எழவே, எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, புல்கித் ஆர்யா ரிசார்ட்டின் ஒரு பகுதி மாநகராட்சி அதிகாரிகள் மூலம் புல்டோசர் வைத்து  இடிக்கப்பட்டது. மூன்று நாட்களாக சிறுமி காணாமல் போனது குறித்து வழக்குப் பதிவு செய்யாத உள்ளூர் பட்வாரி மற்றும் வருவாய்க் காவல் ஆய்வாளர் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், தந்தை வினோத் ஆர்யா, மகன்கள் புல்கித் ஆர்யா, அங்கித் ஆர்யா ஆகியோரை பாஜக- விலிருந்து நீக்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் ஆத்திரம் குறையாத பொது மக்கள் பாஜக தலைவர்களுக்கு எதிராக கொ தித்தெழுந்தனர். அவர்கள் புல்கித் ஆர்யாவுக்குச் சொந்தமான ரிசார்ட்டிற்கு தீவைத்தனர். அத்து டன், உள்ளூர் பாஜக எம்எல்ஏ ரேணு பிஷ்ட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தி, அவரது காரை அடித்து நொறுக்கினர். எம்எல்ஏ ரேணு பிஷ்ட் போலீஸ் உதவியுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளார்.

;