states

img

நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 2ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அன்று இரு  அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கின. அவை நடவடிக்கை தொடங்கி யதும், பஹல்காம் தாக்குதல், ஆபரேசன் சிந்தூர், பீகார் வாக்காளர் நீக்கம்  பிரச்ச னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சியின் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மக்களவை சபாநாயகர், மாநி லங்களவை தலைவர் இந்த கோரிக்கை யை ஏற்கவில்லை. இதனால் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிளர்ச்சியை தாக்குப் பிடிக்க முடியாமல் இரு அவைகளும் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 12 மணிக்கு அவைகள் தொடங்கியதும் மீண்டும் “இந்தியா” கூட்டணி எம்.பி., க்கள் பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் வேண்டும் என முழக்கங்களை எழுப்பி னர். ஆனால் மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவர் இருவரும் விவாதம் நடத்த முன் வரவில்லை. மேலும் இரு அவைகளும் உடனடி யாக மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப் பட்டது. இந்நிலையில், மதியம் 2 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை கூடின. அப்போதும் எதிர்க்கட்சிகளின் கிளர்ச்சி யை சமாளிக்க முடியாமல் இரு அவை களும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப் பட்டன.