states

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்களன்று (ஜூலை 21) தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடைபெறுகிறது. சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் காரணமாக ஆகஸ்ட் 13 மற்றும் 14 தேதிகளில் மட்டும் அமர்வுகள் நடைபெறாது என  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழைக் கால கூட்டத் தொடரில் ஒன்றிய பாஜக  அரசு 8 புதிய மசோதா உள்பட 17  மசோ தாக்களை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  அதே போல “இந்தியா” கூட்டணி எதிர்க்கட்சிகள் ஆபரேசன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல், இந்தியா -  பாகிஸ்தான் இடையேயான மோதலில்  அமெரிக்கா தலையீடு, மணிப்பூர் பிரச் சனை, பீகார் வாக்காளர்கள் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன. அனைத்துக் கட்சிக் கூட்டம் இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு ஞாயிறன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்  நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.சுரேஷ், ஜெய்ராம் ரமேஷ், தேசிய வாத காங்கிரஸ் (சரத்)  எம்.பி. சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, சமாஜ்வாதி, ஒய்எஸ்ஆர் காங்கி ரஸ், ஐக்கிய ஜனதா தளம், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பின்பு ஒன்றிய நாடாளுமன்ற விவகா ரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தி யாளர்கள் சந்திப்பின் போது கூறுகை யில், “ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெளிப்  படையாக விவாதம் நடத்த தயார்.எதிர்க் கட்சிகளின் கேள்விகளைக் கண்டு பயந்து ஓட மாட்டோம்.  அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை குறிப்பெடுத்துக் கொண்டோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் நாடா ளுமன்றம் சுமூகமாக நடைபெற வேண்  டும் என்பதுதான் அனைவரது குறிக்  கோளாக இருக்கிறது. இதில் அரசுக்கும்  எதிர்க்கட்சிகளுக்கும் இடையே எந்த ஒரு  வேறுபாடும் கிடையாது” எனக் கூறினார்.  மசோதாக்கள் சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா, ஜன் விஸ்வாஸ் விதிகள் திருத்த  மசோதா, இந்திய மேலாண்மை நிறு வனங்கள் திருத்த மசோதா, வரிவிதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா, புவி-பாரம்  பரிய தளங்கள் மற்றும் புவி-எலிக்ஸ் (பாது காப்பு மற்றும் பராமரிப்பு) மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்  பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா, தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு  திருத்த மசோதா உள்ளிட்ட பல மசோ தாக்களை அறிமுகப்படுத்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.