states

நாடு முழுவதும் நெல் சாகுபடி பரப்பு 5.62 சதவிகிதம் அளவிற்கு குறைந்தது!

புதுதில்லி, செப்.3- நாடு முழுவதும் நெல் சாகுபடி பரப்பு, கடந்த ஆண்டை விட 5.62 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளது. இதேபோல பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் சாகுபடி பரப்பும் குறைந்துள் ளது. ஒன்றிய வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுதொ டர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, சில மாநிலங்களில் பெய்யும் மழையின் காரணமாக இதுவரை நடந்து வரும் காரீப் பருவத்தில் நெல் சாகுபடி பரப்பு 5.62 சதவிகிதம்  குறைந்துள் ளது. கடந்த ஆண்டு இதே குறுவைப் பருவ காலத்தில் 406.89 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டி ருந்த நிலையில், நடப்பாண்டு அது 383.99 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.