ஆந்திராவில் அக்.3 முதல் வெளிநோயாளிகள் சேவை நிறுத்தம்?
ஆந்திராவில் தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. இம்மாநில ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கள் சங்கம் (APPHCDA) செவ்வாய்க் கிழமை அன்று ஒரு முக்கிய அறி விப்பை வெளியிட்டது. அதில் “பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் பிற சேவை தொடர்பான கவலைகள் போன்ற கோரிக்கைகளை ஆந்திர அரசு தீர்க்கா விட்டால், அக்., 3 முதல் வெளிநோயாளி சேவைகளை நிறுத்துவோம்” என அறிவித்துள்ளது. மேலும் ஆந்திர பொது சுகாதார இயக்குநர் டாக்டர் பி.பத்மா சசிதர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்த அறிவிப்பை கடிதமாக சமர்ப்பித்துள்ளது. இதுதொடர்பாக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சங்க தலை வர் ரவீந்திர நாயக் பிடிஐ செய்தி நிறுவ னத்துக்கு அளித்த பேட்டியில், “எங்கள் கோரிக்கைகள் உண்மையான வை. ஆனால் ஆந்திர அரசாங்கத்தால் மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படு கின்றன. உடனடியாக தீர்வு காணா விட்டால், அக்டோபர் 3ஆம் தேதி விஜய வாடாவில் உண்ணாவிரதப் போராட் டத்தைத் தீவிரப்படுத்துவோம்” என அவர் எச்சரிக்கை விடுத்தார்.