இடைநீக்கம் செய்யப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை: பிரகலாத் ஜோஷி
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத்ஜோஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து பிரகலாத் ஜோஷி கூறியதாவது: இடைநீக்கத்தை ரத்து செய்வது குறித்து எம்.பி.க்களுடன் தனித் தனியே அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. குறைந்தபட்ச வருத்தத்தையாவது தெரிவிக்க வேண்டும் என அவர்களிடம் தெளிவாகக் கூறியுள்ளேன். செவ்வாயன்று கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி களின் 50 எம்.பி.க்கள் மனு அளித்தனர். அவர்களில் 26 பேருக்கு அவைத் தலைவர் அனுமதி அளித்திருந்தார். இதில் திரிணாமுல், பகுஜன் சமாஜ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரே கலந்து கொண்டனர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் வருத்தம் தெரி வித்த பின் அவைகளுக்கு வர அழைப்பு விடுக்கிறேன். அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதுதில்லி, டிச.14- இடைநீக்கம் செய்யப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இடை நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி யும் டிசம்பர் 14 செவ்வாயன்று நாடா ளுமன்றத்திலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாகச் சென்ற னர். கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி யன்று மாநிலங்களவையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட மக்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் ஒன் றிய பாஜக அரசு ஆத்திரமடைந்தது. இதனைத்தொடர்ந்து அவையின் அலுவல்களுக்கு இடையூறு விளை வித்ததாகக் கூறி காங்கிரஸைச் சேர்ந்த ஆறு பேர், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவசேனாவைச் சேர்ந்த தலா இருவர், சிபிஐ மற்றும் சிபிஎம் எம்.பி.க்கள் தலா ஒருவர் என எதிர்க்கட்சி மாநிலங்களவை எம்.பி.க்கள் 12 பேரை கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலை வர்கள் பிரச்சனையை எழுப்பி, இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் முடிவை திரும்பப் பெற வாய்ப்பில்லை என அவைத் தலை வர் வெங்கய்ய நாயுடு பிடிவாதமாக தெரிவித்துள்ளார். அதேசமயம் மன் னிப்புக் கேட்க முடியாது என எதிர்க் கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டன.
இந்த விவகாரத்தை தினந் தோறும் மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து எழுப்பி, வெளிநடப்பு செய்து வரு கின்றனர். இந்தநிலையில் டிசம்பர் 14 செவ்வாயன்று காலை இந்த விவ காரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் எழுப்பினர். பின்னர் மாநி லங்களவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளா கத்தில் உள்ள காந்தி சிலை முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ,12 மாநிலங்க ளவை எம்.பி.க்கள் இடைநீக்க உத்த ரவை ரத்து செய்யக் கோரி நாடாளு மன்றத்தில் இருந்து முழக்கங்களை எழுப்பியவாறு, பேரணியாகப் புறப் பட்டனர். விஜய் சவுக் வரை பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் காங் கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
இந்திய மக்களின் குரல் நசுக்கப்பட்டதன் அடையாளம்
பின்னர் ராகுல் காந்தி பேசுகை யில், 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் இந்திய மக்களின் குரல் நசுக்கப் பட்டதன் அடையாளமாகும். அவர் கள் எந்த தவறும் செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதிக்க கோரிக்கை வைத்தால் ஒன்றிய அரசு ஏற்க மறுக்கிறது. நாங்கள் அரசாங்கத்தை கேள்வி கேட்க முயற்சி செய்தால் அவர்கள் அனுமதிப்பதில்லை . அம ளிக்கு பின்னரே நாடாளுமன்றத் தில் மசோதாக்கள் நிறைவேற்றப் படுகின்றன. இது நாடாளுமன்றத்தை நடத்தும் முறையல்ல. தேசிய முக் கியத்துவம் வாய்ந்த எந்தவொரு பிரச்சனையையும் எழுப்ப எங்க ளுக்கு அனுமதிப்பதில்லை. இது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டவசமான படுகொலை. நாடாளுமன்ற கூட்டங் களில் பிரதமர் மோடி பங்கேற்ப தில்லை என்று கூறினார்.